வெங்கியை அடுத்து சந்து?: சூர்யா படங்களை இயக்கும் தெலுங்கு பட இயக்குனர்கள்
‘கங்குவா’ படத்திற்கு பிறகு, கதைத்தேர்வில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. அவ்வகையில், தெலுங்கு திரையுலக இயக்குனர்கள் இருவர் பற்றிக் காண்போம்..
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், லவ் அன்ட் ஆக்சன் ஜானரில் ‘ரெட்ரோ’ திரைப்படம் உருவாகி உள்ளது. சூர்யாவின் 2டி நிறுவன தயாரிப்பான இப்படம் வருகிற மே மாதம் 1-ந் ரிலீஸா உள்ளது.
இதனைத் தொடர்ந்து சூர்யாவின் 45-வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்க, சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதையடுத்து, சூர்யா நடிக்க உள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பாக்கியஸ்ரீ போர்ஸ் நடிக்க உள்ளார். இவர் தற்போது தெலுங்கு திரையுலகில் டிரெண்டிங் ஹீரோயினாக வலம் வருகிறார். இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ரி கொடுக்க உள்ளார். இப்படம், மாருதி காரை பற்றிய கதையாகும். பான் இந்திய அளவில் உருவாகும் இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்க உள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் இவர், அண்மையில் ‘லக்கி பாஸ்கர்’ என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருந்தார். முன்னதாக, தமிழில் தனுஷ் நடித்த ‘வாத்தி’ படத்தை இயக்கியிருந்தார்.
இச்சூழலில், நாகசைதன்யா-சாய் பல்லவி நடித்த ‘தண்டேல்’ படத்தின் இயக்குனர் சந்துவும் சூர்யாவிடம் கதை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.