Pushpa 2

பாக்கியாவிடம் கண்கலங்கி மன்னிப்பு கேட்ட செழியன், ராதிகா எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியாவிடம் செழியன் மன்னிப்பு கேட்க ராதிகா முடிவெடுத்துள்ளார்.

baakiyalakshmi serial today episode update 05-02-25
baakiyalakshmi serial today episode update 05-02-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க ஈஸ்வரி சாப்பிட கூப்பிடுகிறார் கோபி வராமல் இருக்க ஈஸ்வரி சாப்பிட உட்கார்ந்து சோகமாக இருக்கிறார். பாக்கியா இனியாவிடம் ப்ராஜெக்ட் வேலை எல்லாம் முடிச்சிட்டியா என்று சொல்ல இன்னும் கொஞ்சம் இருக்குதுமா என்று சொல்லுகிறார் அது கொஞ்சம் டவுட்டா இருக்கு அதனால இன்னும் பண்ணல என்று சொல்ல ஜெனி நம்ம மதியமா பண்ணி முடிச்சிடலாம் என்று சொல்லி பேசிக்கொண்டிருக்க ஈஸ்வரி சாப்பிடாமல் எழுந்திருக்க பாக்கியா என்னாச்சு என்று கேட்கிறார்.

நான் என் பையனுக்கு சாப்பாடு செஞ்சுட்டு வந்து சாப்பிடுறேன் என்று சொல்ல ஏற்கனவே டைம் ஆயிடுச்சா அத்தை உங்களுக்கு உடம்பு சரியில்ல மாத்திரை போடணும் சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு இனியாவிடம் போய் உங்க அப்பாவ சாப்பிட கூட்டிட்டு வா என்று சொல்லுகிறார் உடனே இனியாவும் அம்மா உங்களை சாப்பிட கூப்பிட்டாங்க வாங்கப்பா என்று சொல்லி கோபியை அழைத்துக்கொண்டு வந்து சாப்பிட உட்கார வைக்கிறார்.

மறுபக்கம் ராதிகா சாப்பாடு ஆர்டர் செய்திருக்க சாப்பாடு வந்தவுடன் இருவரையும் சாப்பிட கூப்பிடுகிறார் ஆனால் ராதிகாவின் அம்மா மற்றும் மயூ இருவரும் சாப்பாடு வேண்டாம் என்று சொல்ல ராதிகா மயூவிடம் மதியமே சரியா சாப்பிடல என்ன ஆச்சு என்று கேட்க மயூத்தயங்கிக் கொண்டே இனிமே டாடி வீட்டுக்கு வர மாட்டாரா என்று கேட்கிறார் உடனே ராதிகாவின் அம்மா இதற்கு நீயே பதில் சொல்லு என்று சொல்லி எல்லாமே எல்லா நேரமுமே சந்தோஷமா இருக்க முடியாது மயு கஷ்டங்களை கடந்து வந்தா நம்ம எதிர்பார்க்கிற சந்தோஷம் நம்மளுக்கு நிறையவே கிடைக்கும் என்று ஆறுதல் சொல்லி உனக்காக நான் இருக்க மயூ ஐ லவ் யூ சொல்லி சமாதானப்படுத்த மயூவும் லவ் யூ மம்மி என்று சொல்லிவிட்டு சாப்பிட செல்கிறார். பிறகு ராதிகாவின் அம்மாவையும் சமாதானப்படுத்தி அவரையும் சாப்பிட கூப்பிடுகிறார்.

கோபி மாடியில் தனியாக நின்று கொண்டிருக்க செழியன் வந்து என்னாச்சுப்பா இங்க எதுக்கு தனியா நின்னுட்டு இருக்கீங்க என்று கேட்கிறார். அவங்க உங்களை எங்க விட்டுட்டு போனது நினைச்சு பீல் பண்றீங்களா எல்லாம் சரியாயிடும் பா என்று சொல்ல உனக்கு ஒரு ஜெனிக்கும் பிரச்சினை வந்தப்போ நீ எப்படி எந்த சூழ்நிலை இருந்தியோ அது மாதிரி தான் இருக்கு ஒருத்தவங்களோட அருமை இருக்கும்போது தெரியாது சரியா அவங்கள நம்போ இங்க தானே இருக்க போறாங்க எங்க போய்ட்டு போறாங்கன்னு நம்ப பெருசா கண்டுக்க மாட்டோம் ஆனால் அவங்க போனதுக்கு அப்புறம் தான் அவங்க நம்மளுக்காக இவ்வளவு செய்திருக்காங்க என்பதை நாம் யோசிப்போம் என்று சொல்லி கண்கலங்குகிறார். நாங்க இருக்கும் பா நீங்க தைரியமா இருங்க என்று சொல்ல ராதிகாவிற்கு ஃபோன் போட்டுக்கிட்டே இருக்கேன் ஆனா முதல்ல ரிங் போச்சு இப்போ சுவிட்ச் ஆப் பண்ணிட்டா என்ன பண்றதுன்னு எனக்கு ஒண்ணுமே புரியல இப்பதான் எனக்கு எல்லா விஷயமும் ஞாபகத்துக்கு வருது எல்லாத்தையும் யோசித்துப் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு சரி நீ போ செழியா நான் பாத்துக்குறேன் என்று சொல்லி செழியன் கீழே அனுப்ப செழியனும் கண்கலங்கி கீழே வருகிறார்.

கிச்சனில் பாக்கியா கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருக்க செழியன் பாக்கியவை பார்த்து கோபி சொன்னதை எல்லாம் நினைத்து கண்கலங்குகிறார். உடனே பாக்யா பார்த்து விட செழியனை கூப்பிட்டு என்னாச்சு சரியா என்ன விஷயம் என்று கேட்க ஒன்னும் இல்லம்மா தண்ணி குடிக்க வந்தேன் என்று சொல்லுகிறார். சரி உட்காரு குடி என்று சொல்ல நான் ஏதாவது உனக்கு டீ காபி போடவா என்று கேட்கிறார் வேண்டாமா என்று சொல்ல இதே எழில இருந்தா போதும் என்று சொல்லி இருப்பான் எப்போ எவ்வளவு கொடுத்தாலும் டீ காபி குடிப்பா என்று சொல்ல நீ எழில மிஸ் பண்றியாமா என்று செழியன் கேட்கிறார். ஆமா அப்படின்னு மிஸ் பண்ணவில்லையா என்று கேட்ட ஆமாம் என்று சொல்லி பேசுகிறார் உடனே நீ எல்லாருக்கும் எல்லா பிரச்சனையிலும் கூட நிக்கிற ஆனா நாங்க யாரும் உங்களுக்கு அப்படி நிற்கலாமா என்று சொல்ல என்ன செழியன் என்ன ஆச்சு என்ன பேசிக்கிட்டு இருக்க என்று கேட்க அப்பா உன்னை டைவர்ஸ் பண்ணும்போது நீ அவ்வளவு பெரிய வலியில் இருந்திருப்ப அதே வலியை தான் இப்ப அப்பாவும் அனுபவிக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் உனக்கு எந்த ஆறுதலும் இல்லாம போயிடுச்சு என்று சொல்ல அதற்கு பாக்யா நீங்க எல்லாரும் தான் இருந்தீங்களே தெரிஞ்சோ தெரியாமலோ உங்க எல்லாரையும் பார்த்துக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் எனக்கு இருந்தது அதனாலதான் அவ்ளோ பெரிய பிரச்சனையிலிருந்து என்னால வெளியே வர முடிஞ்சது. என்று சொல்லுகிறார்.

ஏமாற்றங்கள் இன்னும் எங்க ரெண்டு பேருக்கும் பெருசில்ல சரியா படிக்கணும்னு ஆசைப்பட்டேன் வேலைக்கு போகணும்னு ஆசைப்பட்டா எதுவுமே நடக்கல அதே மாதிரி உங்க அப்பாவும் படிச்சு முடிச்சிட்டு ராதிகாவ கல்யாணம் பண்ணனும்னு நினைச்சாரு. அதுவும் நடக்கல நாங்க எவ்வளவோ கடந்து வந்துட்டோம் என்று சொல்ல செழியன் எங்க எங்களுக்கு வர கஷ்டத்துல மட்டும் தீர்த்து வைக்கிறீர்கள் அப்போ உங்க கூட நாங்க இருக்கக் கூடாதா என்று சொல்ல, உங்க பிரச்சனையை சரி பண்ண தெரிஞ்ச எங்களுக்கு எங்க பிரச்சனையே சரி பண்ணிக்க தெரியாதா நீ அதை பத்தி எதுவுமே வருத்தப்படாத நீ போய் நிம்மதியா தூங்கு என்று சொல்ல செழியன் சாரிமா என்று சொல்லுகிறார் அதெல்லாம் ஒன்னுமில்ல செய்ய நீ போய் படு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

மறுநாள் கோபி ராதிகாவின் வீட்டிற்கு போக ராதிகாவின் அம்மா அதிர்ச்சியான தகவல் ஒன்றை சொல்லுகிறார். கோபி என்ன செய்ய போகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshmi serial today episode update 05-02-25
baakiyalakshmi serial today episode update 05-02-25