Pushpa 2

மீனாவிற்கு கிப்ட் கொடுத்த சுருதி, சிட்டியிடம் பேசிய ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனாவிற்கு ஸ்ருதி கிப்ட் கொடுக்க ரோகிணி சிட்டியிடம் பேசியுள்ளார்.

SiragadikkaAasai Serial Today Episode Update 05-02-25
SiragadikkaAasai Serial Today Episode Update 05-02-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதி மற்றும் ரவியின் பங்க்ஷனில் பாட்டு பாட முதலில் ரோகினி மற்றும் மனோஜ் இருவரும் பார்த்து வைக்கப்பட்டு சிரிக்கின்றனர். அடுத்த பாடிய பாட்டுக்கு விஜயா கையைப் பிடித்து அண்ணாமலை பாட்டை ரசித்து கேட்கிறார். அடுத்து பாடிய பாட்டிற்கு மீனா மற்றும் முத்து இருவரும் சந்தோஷப்பட்டு கேட்டனர்.

பிறகு மனோஜ் ரோகினி இருவரும் மோதிரம் கிப்ட் கொடுக்க மீனா பிளவர் பொக்கே கொடுக்கிறார் உடனே சுருதி இது நீங்களே பண்ணீங்களா மீனா என்று கேட்க ஆமாம் என்று சொல்லுகிறார்.சூப்பரா இருக்கு வாங்க போட்டோ எடுத்துக்கலாம் என்று கூப்பிட்டு அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்கிறார். உடனே நீத்து காலில் கட்டு போட்டு கொண்டு வர ரவி நீங்க ஏன் வந்தீங்க ரெஸ்ட் எடுத்து இருக்கலாம் என்று சொல்ல நீங்க எங்க ஹோட்டலுடன் பெஸ்ட் செஃப் எப்படி வராமல் இருக்க முடியும் என்று சொல்லிவிட்டு சுருதியிடம் சாரி ஸ்ருதி எனக்கு அடிபட்டுருச்சு அதனாலதான் அப்படி நடந்தது அதுவும் இல்லாம காலிலேயே கொஞ்சம் அடிபட்டு இருக்கு கட்டு போட்டு இருக்காங்க என்று சொல்ல சுருதி நான் புரிஞ்சுகிட்டேன் வந்ததுக்கு ரொம்ப நன்றி என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் முத்துவும் மீனாவும் கேக் சாப்பிட்டுக் கொண்டிருக்க ஸ்ருதியின் அப்பா என்ன முத்து எப்படி இருக்க என்று கேட்க மீனாவிடம் கேட்க கொடுத்துவிட்டு முத்து கையெடுத்து கும்பிட்டு உங்களுக்கும் எனக்கும் ஆகாது எப்ப பாத்தாலும் ஏதாவது ஒரு ஃபங்ஷன்ல பிரச்சனை நடக்குது தயவு செய்து என்னை விட்டுடுங்க என்று ஓடி விடுகிறார். மறுபக்கம் அனைவரும் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்க விஜயா கால் வலியில் இருக்கிறார். விஜயாவிடம் அண்ணாமலை பேசிக் கொண்டிருக்க மனோஜ் ஸ்ருதியாலதா லேட் ஆச்சு என்று சொல்ல சுருதி உண்மையை சொல்ல வர உடனே முத்து எனக்கு ஒன்னும் அந்த மாதிரி வேலை வந்திருக்கு என்ன பண்ண முடியுமோ அதெல்லாம் ஒன்னும் செய்ய முடியாது என்று சொல்லி சமாளித்து விடுகிறார்.

உடனே சுருதி நாம் மீனாவுக்கு ஒரு கிப்ட் வாங்கி இருக்கேன் என்று சொல்லி கொடுக்க நீங்க இல்லன்னா இன்னைக்கு எதுவும் நடந்திருக்காது என்று சொல்ல உடனே முத்து டெக்ரேசன் பத்தி சொல்றாங்க என்று சொல்லி சமாளிக்க மீனா கிப்ட் வாங்கிக் கொள்ளுகிறார்.அதை பிரித்து பார்க்க அதில் போன் இருக்கிறது உடனே விஜயா இவர் போன்லையா முழம் போட போற என்று கேட்க அதற்கு ஸ்ருதி அவங்க பண்ற பிசினஸ்க்கு இப்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கும் நீங்க ஏன் இப்படி பேசுறீங்க அவங்க மனசுக்கு டைமண்ட் கூட கொடுக்கலாம் ஆனா எங்களால முடிஞ்சது நாங்க கொடுக்கிறோம் என்று சொல்ல விஜயாவின் முகம் மாறுகிறது. உடனே மனோஜ் நம்போ கோல்ட் மோதிரம் போட்டோ ஆனா நம்மளுக்கு எதுவும் கொடுக்கல பொக்கே கொடுத்தவங்களுக்கு கிப்ட் பாரு என்று சொல்ல எனக்கு மீனா மாதிரி நடிக்க தெரியல மனோஜ் என்று ரோகினி சொல்லுகிறார். உடனே ஸ்ருதிக்கு மீனா நன்றி சொல்லிவிட்டு அனைவரும் கிளம்புகின்றனர்.

மறுநாள் டிராபிக் கான்ஸ்டபிள் அருண் அவர் அம்மாவை உடம்பு சரி இல்லை என்று சீதா வேலை செய்யும் ஹாஸ்பிடலுக்கு கூட்டி வருகிறார். டாக்டரிடம் செக் பண்ண, அருண் இரண்டு மூன்று நாட்களாக அம்மாவிற்கு விட்டுவிட்டு ஃபீவர் நானும் டேப்லட் கொடுத்தோம் என்று சொல்ல யாரை கேட்டு இது மாதிரி பண்றீங்க உடம்புக்கு ஏத்த மாதிரி தான் டேப்லட் கொடுக்கணும் இல்லன்னா அதுவே ஒரு பிரச்சனையாகிடும் என்று சொல்லி டாக்டர் கண்டிக்கிறார். இதுக்கு மேல இது மாதிரி பண்ண மாட்டோம் என்று சொல்ல அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க பல்ஸ் லோவா இருக்கு இன்னைக்கு ஒரு நாள் அவங்கள அட்மிட் பண்ணனும் என்று சொல்ல பாக்குறதுக்கு ஆள் இல்லை என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து பைலில் கையெழுத்து வாங்க சீதா வர இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை கேட்கிறார்.

உடனே டாக்டர் ஒரு வேலையாக வெளியே போக அருண் இடம் சீதா அவங்க இருக்கிற நிலைமைக்கு நீங்கள் அட்வைஸ் பண்ணா தான் நல்லது என்று சொல்ல, எனக்கு இப்போ முக்கியமான ஒரு வேலை இருக்கு என்று சொல்லுகிறார் சரி நீங்க போங்க நான் பாத்துக்குறேன் எனக்கு ஆறு மணி வரைக்கும் தான் டியூட்டி நீங்க வர வரைக்கும் நான் கொஞ்ச நேரம் பாத்துக்கிறேன் பரவால்ல என்று சொல்லி முடிவெடுக்க வைக்கிறார்.

பிறகு ரோகிணி சிட்டியை வரவைத்து தனியாக பேச ரோகினி என்ன சொல்லுகிறார்? அதற்கு சிட்டி பதில் என்ன?என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

SiragadikkaAasai Serial Today Episode Update 05-02-25
SiragadikkaAasai Serial Today Episode Update 05-02-25