Pushpa 2

ராதிகா சொன்ன வார்த்தை, பாக்யா கொடுத்த பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்!!

ராதிகா சொன்ன வார்த்தையால் பாக்யா பதில் கொடுத்துள்ளார்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 03-01-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 03-01-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடு மயூவிடம் பாக்கியா பேசிக்கொண்டு தூங்க வைக்க எனக்கு இது மாதிரி தான் இருக்கு புடிச்சிருக்கா ஆண்ட்டி எல்லாரும் சண்டை போடுறாங்க ஆனா எனக்கு சண்டை போடுறது பிடிக்காது என்று சொல்ல பாக்யா அவருக்கு சமாதானம் படுத்தி தூங்க வைக்கிறார் அந்த நேரம் பார்த்து பெட்ஷீட் போட்டுக் கொண்டு இனியா ரூமுக்குள் வர மயு திருடன் என நினைக்க உடனே இனியா லைட்டை போடுகிறார். பாக்கியா என்னாச்சு என்று கேட்க அங்கு சரியா ஏசி ஓடல ஃபேன் ஓடல என்று சொல்லி இங்கே தூங்கப் போவதாக சொல்லி பாக்யாவின் பக்கத்தில் படுக்கிறார். ஒரு பக்கத்தில் மயூவும் மறுபக்கத்தில் இனியாவும் பாக்யாவை கட்டிப்பிடித்து தூங்குகின்றனர்.

மறுபக்கம் கோபி ரூமில் காத்துக்கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ராதிகா வர எங்க போயிருந்த ராதிகா என்று கேட்க மொட்ட மாடியில் போன் பேசிட்டு வந்தேன் என்று சொல்லுகிறார். மயூவ போய் கூட்டிட்டு வரேன் என்று சொல்ல அதுல ஒன்னும் வேண்டாம் இன்னைக்கு பாக்யாவுடன் படுத்துகிறேன் மயூ சொல்லவும் கூட்டிட்டு போயிட்டாங்க என்று சொல்ல அவங்களுக்கு எதுக்கு சிரமம் என்று ராதிகா கேட்க சிரமமான இது பாக்கியா எடுத்த முடிவுதான் என்று சொல்லுகிறார். பிறகு நான் ஒரு எச்சாரா வேலை பார்த்துகிட்டு இருக்க ஒருத்தவங்கள பாக்கும்போது அவங்க மனசுல என்ன நினைக்கிறாங்க என்பதை நான் தெரிஞ்சுப்பேன் ஆனா ஒரே ஒருத்தர் மட்டும் என்னால புரிஞ்சுக்கவே முடியலன்னா அது பாக்கியம் தான்.

அவங்களுக்கும் அவங்க பசங்களுக்கும் நான் எவ்வளவு துரோகம் பண்ணி இருக்கான்னு தெரிஞ்சும் அவங்க என் மேல அக்கறையா இருக்காங்க உங்களுக்கு உடம்பு சரியில்லாத போனதுக்கு அப்புறமும் சரி நான் வீட்டுக்கு வந்து பார்க்கும்போது சரி விடு காலி பண்ணும் போதும் சரி அவங்க மட்டும் தான் எனக்கு ஆறுதலா இருந்தாங்க என்று சொல்லுகிறார். உடனே கோபி பழைய பாக்யாவிற்கும் இப்ப இருக்குற பாக்கியம் அவருக்கு ஒரு மிகப்பெரிய டிரான்ஸ்பர் மெஷின் இருக்கு இப்ப ரொம்ப ஸ்மார்ட்டா பேச ஆரம்பிச்சிட்டா வாடகை குடுத்துட்டு இருனு சொல்லும்போது அவளோட மெச்சூரிட்டி நல்லா இருந்தது நான் இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து பார்த்து கிட்டு இருக்கேன் வேற லெவல் பாக்யாவா தான் இருக்கா என்று சொல்லி பாக்யாவை கோபி புகழ்ந்து பேச ராதிகா அமைதியாக இருக்கிறார் என்ன ஆச்சு ராதிகா என்று கேட்க பொண்ணு இல்ல தலைவலிக்குது என்று சொல்லுகிறார் சரி நீ படுத்துக்கோ நான் போய் பிரஷர் போயிட்டு வரேன் என்று சொல்லி சென்று விட, ராதிகா கோபி சொன்னதை நினைத்துப் பார்க்கிறார்.

மறுநாள் காலையில் பாக்யா வர செல்வி எதுவும் பேசாமல் இருக்க உனக்கு என்ன ஆச்சு இன்னைக்கு என்று கேட்கிறார். இருந்தாலும் நீ ஓவரா தான் பண்ற என்று சொல்ல நான் என்ன பண்ண என்று பாக்கிய கேட்கிறார் அதற்கு செல்வி கோபி சார தங்க வச்ச சரி ராதிகா மேடத்து தங்க வச்சேன் சரி ஆனா அவங்க பொண்ணுக்கு காபி கூட நீ குடுத்தியா என்று கேட்க இனியாவுக்கு கொடுத்த அதுல அப்படியே கொடுக்கறதுனால என்ன ஆயிட போகுது என்று சொல்ல இருந்தாலும் உனக்கு ரொம்ப பெரிய மனசுதான் என்று சொல்லுகிறார்.

உடனே ராதிகா வர பாக்யாவிற்கு நன்றி சொல்லுகிறார் நான் கிச்சன் யூஸ் பண்ணிக்கலாமா என்று கேட்க உங்க ஹஸ்பண்ட் அதுக்கும் சேர்த்துதான் பே பண்றாரு பண்ணிகோங்க என்று சொல்லுகிறார். இருவரும் கிச்சனில் சமையல் பற்றி பேசி சிரித்துக்கொண்டிருக்கு அந்த நேரம் பார்த்து ஈஸ்வரி வந்து கோபமாக பார்க்க பக்கத்தில் கோபி சந்தோஷமாக பார்க்கிறார். உடனே கோபியிடம் ராதிகா காபி போட்டு கொடுக்கவா என்று சொல்ல ஓகே என்று சொல்லுகிறார் என்று சொல்லுகிறார். பிறகு இருவரும் உட்கார்ந்து கொண்டிருக்க அவர்கள் இருவரும் சேர்ந்து காபி போட்டு எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கின்றனர். ராதிகா போன் வந்தவுடன் சென்று விட பாக்யாவிடம் ஈஸ்வரி நீ பண்றது எல்லாம் சரியா இருக்கா என்று சொல்ல அவளை எதற்கு கிச்சன்ல விட்ட என்று கேட்க காசு வாங்கிட்டு தான் அதை விட்டேன் என்று சொல்லுகிறார். உனக்கு காசு தான் முக்கியமா போயிடுச்சா என்று கேட்க பணம் தானே எல்லாமே என்று சொல்லுகிறார். ஈஸ்வரி மீண்டும் பேச வர உங்களுக்கு தோசைக்கு தக்காளி சட்னி போதுமா இல்ல வேற ஏதாவது செய்யவா என்று சொல்ல உன்கிட்ட பேச முடியுமா என்று சொல்லிவிட்டு ஈஸ்வரி சென்று விடுகிறார்.

பிறகு ஹாலில் உட்கார்ந்து கொண்டிருக்க கோபியும் வந்து உட்கார்ந்து ஹேமா பாக்யாவை திட்டிக்கிட்டே இருக்க பாக்கியா பாவம் என்று சொல்ல, நீ எதுக்கு அப்போ ஹார்ட் அட்டாக் காரிய கூட்டிட்டு வந்தேன் என்று கேட்கிறார். ஹார்ட் அட்டாக் காரிய யாருமா அது என்று கேட்க அந்த ராதிகா தான் என்று சொல்லுகிறார்.

பாக்யாவும் ராதிகாவும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிற ராதிகா என்ன சொல்லுகிறார்? அதற்கும் பாக்யாவின் பதில் என்ன? என்ன நடக்கப் போகிறது? என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 03-01-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 03-01-25