கோபி சொன்ன வார்த்தை,இனியா எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
கோபி சொன்ன வார்த்தையால்,இனியா முடிவு ஒன்று எடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபிக்கு உடம்புக்கு முடியாமல் இருப்பதாக ஈஸ்வரி போன் போட்டு இருக்க செழியன் இனியா இருவரும் வந்து நலம் விசாரிக்கின்றனர். செழியன் ஹாஸ்பிடல் போகலாம் வாங்கபா என்று கூப்பிட அதெல்லாம் வேண்டாம் செழியன் பிபி கொஞ்சம் அதிகமாயிடுச்சு என்று சொல்லுகிறார். முன்ன மாதிரி என்னோட உடம்பு இப்ப இல்ல ஆப்ரேஷன் அப்புறம் என்னோட உடம்புல என்ன நடக்கும்னு தெரியல என்று சொல்லுகிறார் உடனே ஈஸ்வரி ஏன் இனியா நீ இப்படி பண்ணிக்கிட்டு இருக்க என் புள்ளையை என் கண் முன்னால் போக வச்சுட்டு என்னை தவிக்க விடலாம் என்று பாக்குறியா என்று கேட்கிறார்.
உடனே கோபி இனியவை எதுவும் சொல்லாதீங்கம்மா எல்லாருக்கும் இருக்கிற ஒரு ஆசை தான் எனக்கும் இருந்தது அவ்வளவுதான் அவளை எதுவும் கம்பெல் பண்ண வேண்டாம் என்று சொல்லி கண்கலங்க உடனே ஈஸ்வரி எப்போ உனக்கு சந்தோஷமா என்று கேட்கிறார் செழியன் இப்ப கூட எதுவும் பேச மாட்டியா என்று சொல்ல ஈஸ்வரி அவ எப்படி பேசுவா என்று ஆரம்பிக்க அதற்குள் இனியா அவங்கள வர சொல்லுங்க என்று சொல்லி விடுகிறார் உடனே அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். பிறகு கோபி ஈஸ்வரி செழியன் மூவரும் ஹாலில் உட்கார்ந்து கொண்டிருக்க பாக்கியா கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். பாக்யாவிடம் கோபி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிட்ட எல்லாத்தையும் விசாரிச்சுட்டான் இனியா விஷயத்துல அவன் எந்த முடிவெடுத்தாலும் சரியாதான் இருக்கும் என்று சொல்லுகிறார்.
உடனே இப்ப எதுக்கு அம்மாவுக்கு அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க உங்க அம்மாவோட வரலாறு அப்படி நல்ல விஷயத்தை கெடுக்கறதில்ல டாக்டர் பட்டம் வாங்கி இருக்கா என்று சொல்லுகிறார். அவங்க வந்துட்டு போற வரைக்கும் வாய் திறக்காத என்று சொல்ல நான் எதுவும் பேசல ஆனா இனியா விருப்பத்தை மீறி எதுவும் நடக்க கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்க செந்தில் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க என்று சொல்லுகிறார். உடனே குடும்பத்தினர் அனைவரும் வெளியில் வந்து வரவேற்க ஈஸ்வரி பாக்யாவை போக சொல்லுகிறார் அப்போது மாப்பிள்ளையின் அம்மா மற்றும் மாப்பிள்ளை சில சொந்தக்காரர்கள் வர அவர்களை பாக்கியா வரவேற்று வர வைக்கிறார் உடனே ஈஸ்வரி இதையாவது செஞ்சாலே என்று நினைக்கிறார்
செந்தில் குடும்பத்தில் இருக்கிறவங்களை அறிமுகப்படுத்தி வைக்கவா என்று கேட்க அவர் வந்துட்டோம் என்று சொல்லுகிறார் சுதாகர் மனைவி. சார் இன்னும் வரலையா என்று கேட்டா வெளியே போன் பேசிக்கிட்டு இருக்காரு வந்துருவாரு என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே சுதாகர் என்ட்ரி கொடுக்கிறார். உடனே பாக்யா அதிர்ச்சியாக நிற்க சுதாகர் நேராக வந்து பாக்கியலட்சுமி இடம் ஒன்றுமே தெரியாதது போல் இது உங்க வீடா நான் திரும்பு இங்க வருவேன்னு நினைச்சு கூட பாக்கல என்று சொல்லுகிறார் இனியா உங்களுக்கு என்ன வேணும் என்று கேட்க என்னோட பொண்ணு என்று பாக்யா சொல்லுகிறார் ஆனால் சுதாகர் எதுவும் தெரியாதது போல் ஆக்டிங் கொடுக்கிறார். ஈஸ்வரி உங்களுக்கு பாக்கியவ முன்னாடியே தெரியுமா என்று கேட்க பிசினஸ் விஷயமா ஒரு டைம் மீட் பண்ணி இருப்போம் என்று சொல்லுகிறார் பிறகு இருவர் குடும்பமும் அறிமுகப்படுத்திக் கொள்ள மாப்பிள்ளை அம்மா பொண்ணு எப்ப காட்டுவீங்க என்று கேட்க ஜெனி மற்றும் அமிர்தா இருவரும் இனியாவை அழைத்து வருகின்றனர்.
இனியாவும் ரெடியாகி வந்து நிற்க மாப்பிள்ளையும் இனியாவை பார்த்து பிடித்தது போல் வெக்கப்படுகிறார் உடனே கொஞ்ச நேரத்தில் தயங்கிக் கொண்டே இருக்க செழியன் இனியா கிட்ட தனியா பேசணும் நினைக்கிறார் போல என்று சொல்ல இதில் என்ன இருக்கிறது போய் பேசிட்டு வாங்க என்று சொல்லி அனுப்பி வைக்கின்றனர். ஆனால் ஈஸ்வரி இனியா ஏதாவது பேசிடுவாளோ என்று பயப்படுகிறார்.
பிறகு இருவரும் ரூமில் என்ன பேசுகின்றனர்? ஈஸ்வரி என்ன செய்கிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
