ரோகினியை வெளுத்து வாங்கிய விஜயா, மனோஜ் கொடுத்த ஷாக், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகிணியே விஜயா வெளுத்து வாங்க, மறுபக்கம் மனோஜ் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா ரோகினி குறித்து கோபமாக பார்வதியிடம் பேசிக் கொண்டிருக்க அண்ணாமலை போன் போட்டு பார்வதி வீட்ல இருக்கியா என்று கேட்க உங்களுக்கு யார் சொன்னது என்றும் விஜயா கேட்கிறார் உனக்கு இருக்கிற ஒரே பிரண்டு பார்வதி தானே என்று சொல்ல ஆமாம் என்று சொன்னவுடன் வீட்டுக்கு வா அம்மா வந்திருக்காங்க என்று சொல்ல டென்ஷனான விஜயா அவர்களுக்கு எதுக்கு இப்ப சொன்னீங்க என்று கேட்கிறார் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டிய நீ போய் உட்கார்ந்து கிட்டு இருந்தா யாரு கூப்பிட முடியும் என்று கேட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்பி வர சொல்ல, மனோஜ் ரோகினிக்கு போன் பண்ணி இருக்கா எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் என்று கூப்பிடுகிறார்.
எனக்கு இருக்கிற டென்ஷன்ல அவன்ல பார்த்த நான் என்ன பண்ண வேண்டும் என்று தெரியாது ஆனால் உங்க அம்மா தடுக்க கூடாது என்று சொல்ல அண்ணாமலை எதுவும் பேசாமல் இருக்க சரி வர வைங்க சொல்லுகிறார். உடனே நடந்த விஷயங்களை பார்வதி இடம் சொல்லிவிட்டு விஜயா நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு போகுமாக கிளம்புகிறார். உடனே ரோகினி மற்றும் விஜயா இருவரும் ஒரே நேரத்தில் எதிரெதிரில் ஆட்டோவில் வந்து இறங்குகின்றனர் ஆட்டோக்காரரிடம் காசு கொடுக்கிறார் அவர் சேஞ்ச் இல்லை என்று சொல்ல ரோகிணி கொடுக்க வர மீதி நீயே வச்சுக்கோ என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
பிறகு இருவரும் உள்ளே போக முத்து பாட்டி இடம் நீ என்ன பாட்டி சாப்பிடுற கொஞ்சம் கேட்க நான் சாப்பிடறதுக்காக வந்தேன் என்று சொல்லுகிறார் அதற்கு முத்து சாப்பிட்டா தான தென்பா பஞ்சாயத்து பேச முடியும் என்று சொல்லி மீனாவிடம் சிக்கனா மட்டனா மீனா எனக்கு எல்லாமே வாங்கிட்டு வாங்க என்று சொல்லுகிறார் உடனே பாட்டி நீங்க வேற அமைதியா இருங்கடா நானே அவங்க வரலையா என பார்த்துக்கிட்டு இருக்கேன் என்று சொல்லுகிறார். பிறகு குடும்பத்தில் இருக்கும் அனைவரும் வந்துருவாங்க என்று சொல்லிக் கொண்டிருக்க விஜயாவும் ரோகிணியும் ஒரே நேரத்தில் வந்து நிற்கின்றனர்.
உடனே முத்து ரெண்டு பேரும் ராசி ஆயிட்டாங்க போல பாட்டி இதுக்கு மேல உனக்கு என்ன வேலை இருக்கு என்று கேட்க விஜயா கோபமாக வந்து அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது என்று சொல்லிவிட்டு பாட்டியிடம் நலம் விசாரிக்கிறார். ரோகினி வெளியில் நின்று கொண்டிருக்க மனோஜ் வந்து விஜயாவை விசாரித்து விட்டு மிக நின்றவுடன் பாட்டி ரோகினியை கூப்பிடு என்று சொல்லுகிறார் உடனே பாட்டி சொல்றாங்க இல்ல வா என்று சொல்லுகிறார். ரோகினி உள்ளே வந்தவுடன் பாட்டி விஜயாவிடம் பிரச்சினையை தீர்த்து வைப்பான்னு பாத்தா நீ போய் அங்க உக்காந்துகிட்டு இருக்கேன் என்று கோபப்பட இங்கே இருந்திருந்து நான் கொலைகாரியா தான் இருப்பேன் அவ எவ்வளவு போய் பேசி இருக்கா என்று கோபப்படுகிறார். உடனே பாட்டி விஜயாவை கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க நீங்க என்ன நான் தப்பு பண்ண மாதிரி பேசிக்கிட்டு இருக்கீங்க அவ எவ்வளவு பெரிய உண்மையை மறைச்சு தப்பு பண்ணி இருக்கா நீ போய் அவளை அடி மனோஜ் என்று சொல்லுகிறார்.
உடனே பாட்டி நான் இங்கே இருக்கிறது உனக்கு தெரியலையா பேசிகிட்டு தானே இருக்கேன் உனக்கு தோணலையா என்று கேட்க இவ்வளவு ஏமாத்துனதுக்கு அப்புறம் நான் காரணத்தை தெரிஞ்சு என்ன பண்ண போற என்று மீண்டும் ரோகினியின் மீது கோபமாகவே இருக்க மனோஜை அடிக்கப் போறியா இல்லையாடா என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார். உடனே ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை இழந்த விஜயா இவளால ஏமாந்தது நான்தான் என்று சொல்லி இவளை நான் தான் கூட்டிட்டு வந்தேன் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி ரோகிணியை ரெண்டு அறை விட்டு தள்ளி அடிக்கிறார் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் பதறிப் போக வெட்கம் கெட்டவளே என்ன கோமாளியா கிட்ட இல்லடி என்று கோபப்பட்டு இன்னொரு அரை அரைய போக மனோஜ் நிறுத்துங்கமா என்று சொல்லுகிறார்.
உடனே விஜயா அதிர்ச்சியாகி பார்க்க மனோஜ் என்ன சொல்லுகிறார்? அதற்கு விஜயாவின் பதில் என்ன? அண்ணாமலை என்ன கேட்கிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
