அர்ச்சனா போட்ட திட்டம், நந்தினியிடம் சிக்கும் திருடர்கள், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா ரூமில் டென்ஷன் ஆக இருக்க நந்தினியுடன் அவளை போய் கார் ஏத்திவிட்டு வர ஒரு நாளாவது என்கிட்ட அப்படி நடந்து இருக்கியா அவங்க விருந்தாளி சார் என்று சொல்ல அவர் விருந்தாளி இல்ல பெருச்சாளி என்று சொல்லுகிறார். உனக்கு நான் முக்கியமா அவ முக்கியமா என்று கேட்க இரண்டு பேரும் தான் என்று சொல்லுகிறார். என்ன இப்படி சொல்லிட்ட என்று கேட்க ஓ நான் என்ன சொல்லணும்னு எதிர்பார்த்திங்க நீங்க தான் முக்கியம்னு சொல்லுவாங்க நினைத்தீர்களா? நீங்க எப்படிங்க எனக்கு முக்கியம் என்று கேட்கிறார். வெளியில தான் புருஷன் பொண்டாட்டின்னு சொல்லி இருக்கீங்க உங்களுக்கு புரியலையா என்று கேட்க சூர்யா மீண்டும் அர்ச்சனாவை பிடிக்குமா இல்லை என்ன ரொம்ப பிடிக்குமா என்று கேட்க, உண்மைய சொல்லட்டுமா என்று சொல்ல அர்ச்சனா அம்மாவ புடிச்ச அளவுக்கு கூட உங்களை எனக்கு பிடிக்காது என்று சொல்லுகிறார்.
ஏன் புடிக்காது என்று சூர்யா கேட்க என்ன விட உங்களால பாதிக்கப்பட்டது அவங்கதான். அவங்க இருக்கிற வசதிக்கு அழகுக்கும் எவ்வளவோ இறங்கி வந்து பண்றாங்க என்று பேச சூர்யா கோபப்பட்டு அறையப் போகிறார். என்ன கேக்குறதுக்கு ஆள் இல்லைன்னு தானே என்கிட்ட இப்படி நடந்துக்கிறீங்க ஆனா அர்ச்சனா அம்மாகிட்ட உங்களால அப்படி நடந்துக்க முடியுமா. நான் எவ்வளவு நல்ல பையன் உனக்கு தெரியுமா என்று கேட்டுவிட்டு இந்த உலகத்திலேயே நான் தான் நல்ல பையனே உனக்கு தெரியுற நாள் வரும் என்று உணர்ச்சிவசமாக பேசிக்கொண்டே இருக்க நந்தினி எங்கேயோ வெளியே போறேன்னு சொன்னீங்க போகலையா என்று பேச்சை மாற்றி அனுப்பி வைக்கிறார்.
அர்ச்சனா மினிஸ்டரிடம் சூர்யா வீட்டில் நடந்த விஷயங்களை பற்றி பேசிக் கொண்டிருக்க மினிஸ்டர் நான் வேணும்னா ஒரு பையன பாக்குற கல்யாணம் பண்ணிக்கிறியா அம்மா என்று கேட்க அர்ச்சனா நீங்க எதுக்குப்பா இப்படி பேசுறீங்க சூர்யா மேல எனக்கு எவ்வளவு லவ் இருக்குன்னு உங்களுக்கு தெரியும் இல்ல என்று கேட்க அதற்கு அர்ச்சனாவின் அம்மா அவனுக்கு தான் உன் மேல லவ் இல்லையே என்று சொல்லுகிறார். நந்தினிக்கு அந்த வீட்டில சப்போட்டா இருக்கிற எல்லாரையும் காலி பண்ணனும்னு நெனச்சேன் பண்ணிட்டேன் சுந்தரவல்லிக்கும் கோபம் அதிகமாயிடுச்சு இப்ப இருக்கிற ஒரே சப்போர்ட் சூர்யா அருணாச்சலம் அவங்களையும் காலி பண்ணிடுவேன் என்று சொல்லுகிறார். அதற்கு மினிஸ்டர் அந்த கிராமத்து வேலைக்காரி வீட்டில் இருக்கிற வரைக்கும் உன்னால ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்ல அவளை விரட்டி அடிக்க தான் பிளான் பண்ணிக்கிட்டு இருக்கேன் என்று சொல்ல, மினிஸ்டர் நந்தினியை வெறுப்பேத்தி அடிச்ச இடத்தில அடிக்கணும் அவளே வெறுத்து போற அளவுக்கு இருக்கணும், என்று சொல்ல, அர்ச்சனாவின் அம்மா ஒரு பொண்ண வாழ்க்கையை எடுக்க இவ்வளவு ஆழமா யோசிக்கிறீங்க இதுக்கெல்லாம் நீங்க ஒரு நாள் அனுபவிப்பீங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
மறுபக்கம் சூர்யா ரூமுக்கு வந்து சரக்கு பாட்டிலிடம் கொஞ்சம் கொண்டே குடிக்க ஆரம்பிக்க நந்தினி ஆம்லெட் கேட்கும்போது நெனச்சேன் இதுக்காக தான் இருக்கும் என்று சொல்ல சூர்யா சரக்கு பாட்டிலை ஒரு கிளாஸில் ஊற்றி ஆம்லெட் சாப்பிட்டு குடிக்க ஆரம்பிக்கிறார். ஒரு நாளாவது குடிக்காம தான் இருந்தா என்ன சார் என்று சொல்ல என்னையும் இவனையும் பிரிக்கவே முடியாது என்று சொல்லுகிறார். அப்ப நீங்க குடிக்கிறதுக்கு முன்னாடி பழைய சூர்யா பழைய சூர்யா ன்னு சொல்றாங்க அப்படியே என்ன சார் பண்ணீங்க என்று கேட்கிறேன். நல்லா வேலை பார்த்தீங்க சுறுசுறுப்பா இருந்தீங்க அதே மாதிரியே இருக்கலாமே என்று கேட்க,அப்படி இருந்து நான் என்ன பண்ணப் போறேன் என்று சூர்யா சொல்லுகிறார். ஒரு பொருள் நமக்கு கையில கிடைக்கும் போது அது கிடைக்காம போகும்போது ஒரு வெறுப்பு வரும் இல்ல அதுதான் என்று சொல்லுகிறார் உங்க அப்பாவுக்காகவாது குடிக்காம இருக்கலாமே என்று சொல்ல இன்னைக்கு என்ன ஓவரா அட்வைஸ் பண்ற என்று கேட்கிறார்.
அர்ச்சனா உன்கிட்ட என்ன பேசிக்கிட்டு இருந்தா என்று கேட்க ஒன்னும் பேசல என்று நந்தினி சொல்லுகிறார். அவ உன்கிட்ட பேச என்ன இருக்கு, அவ இங்க வராத என்றால் வரா கடுப்பா இருக்கு என்று சொன்ன சூர்யா, நீ அப்பாவியா இரு அதுக்குன்னு ரொம்ப அப்பாவியா இருக்காதா அவ ஒரு பிராடு என்று சொல்ல, அதற்கு நந்தினி அப்போ நீங்க எதுக்கு கல்யாணம் மேடை வரைக்கும் போய் தாலி கட்ட போனீங்க என்று கேட்க உன் கிட்ட இது எத்தனை வாட்டி சொல்றது அவகிட்டயும் அவங்க அப்பா கிட்டையும் நான் இத பத்தி நிறைய வாட்டி பேசிட்டேன் என்று சொல்லுகிறார்.
உனக்கு ஒரு விஷயம் சொல்றேன் கேட்டுக்கோ, அவ ஒரு விஷப்பூச்சி உன்னைக் கேட்காமலே அவ உன்ன கடிச்சிடுவா என்று சொல்லுகிறார். உடனே நந்தினி அங்கிருந்து சென்றுவிட மாதவி மற்றும் சுரேகா இருவரும் அர்ஜுன் பற்றி பேசிக்கொண்டிருக்க, சுரேகா அக்கா கிட்ட பத்தி சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்து வேண்டாம் என முடிவெடுக்கிறார். அவன் என் பின்னாடியே சுத்திக்கிட்டு இருந்தா இப்ப முத்திப்போச்சு என்று சொல்ல இதையெல்லாம் என்ன நம்ப சொல்றியா என்று மாதவி சொல்லுகிறார். உடனே கதையை மாற்றி வளையல் விஷயம் என்ன ஆச்சு என்று கேட்கிறார். இதே வளையல் தான் ஆனா அது எப்படி சூர்யா ரூமுக்கு வந்துச்சு என்று தெரியல என யோசிக்க சுரேகா நந்தினியை பார்த்தவுடன் கூப்பிடுகிறார். நீயும் சூர்யாவும் ரெசார்ட்ல போகும்போது யாராவது ரூமுக்கு வந்தாங்களா என்று கேட்க இல்லை என்று சொல்லுகிறார். நல்லா யோசிச்சு சொல்லு என்று சொல்ல நான் இல்லாத நேரமா பார்த்து வேணா வேற யாராவது வந்து இருக்கலாம் என்று சொல்லுகிறார். அதுவும் இல்லாம எனக்கு கடத்தி வைத்திருக்கும் போது கூட வந்திருக்கலாம்ல என்று சொல்லுகிறார் இதையெல்லாம் ரேணுகா மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருக்க மாதவி ரெசார்ட்க்கு அர்ச்சனா எதுக்கு வந்தா என்று கேட்க தெரிந்த ஹோட்டல் என்று சொன்னாங்க என்று நந்தினி சொல்ல தெரிஞ்ச ஹோட்டல் ஆக இருந்தாலும் அது எப்படி கரெக்டா நீங்க போகும்போது வர முடியும் என்று கேட்க எனக்கு தெரியாதுமா என்று நந்தினி சொல்லிவிடுகிறார்.
சரி அர்ச்சனா உங்க ரூமுக்கு வந்தாளா என்று கேட்க, ஆமா வந்தாங்க, அதுவும் ரூம்குள்ள எல்லாம் வரல சார்ஜர் கேட்டாங்க நான் எடுத்துக்கிட்டு போய் கொடுத்தேன் அங்கேயே அந்த ரூம்ல தூங்கிட்டோம் என்று சொல்ல, சுரேகா எனக்கு புரிஞ்சிடுச்சி உங்களுக்கு புரியலையா என்று சொல்லி, நந்தினியை அனுப்பிவிட்டு இவ அர்ச்சனா ரூம்ல தூங்கும்போது அர்ச்சனாவோட வளையல தூக்கிட்டு வந்துட்டு இருப்பா அதுதான் நடந்திருக்கும் என்று சொல்ல, என்ன வேணா நடந்திருக்கட்டும் ஆனா அவ நம்ம நினைச்சதை விட ரொம்ப டேஞ்சர் என்று பேசிக் கொண்டிருக்க இதனை உடனே ரேணுகா அர்ச்சனாவிற்கு ஃபோன் போட்டு சொல்லுகிறார். உங்களோட ஒரு வளையல் ரெசார்ட்ல காணாம போச்சுன்னு சொன்னீங்க இல்ல அது இப்போ மாதவி கையில இருக்கு என்று சொல்ல அதற்கு அர்ச்சனா என் மேல சந்தேகம் வந்திருக்குமே என்று சொல்ல உங்க மேல சந்தேகம் வந்துச்சு ஆனால் நந்தினி மேல இருந்த சந்தேகம் திரும்பிடுச்சு இது மட்டும் இல்லாம இந்த வீட்டில அறுபது பவுன் நகை திருடு போனதாக சொல்லிட்டு இருக்காங்க என்று சொல்ல என்னடி சொல்ற என்கிட்ட 20 பவுன் சொன்னாங்க என்கிட்டயே வேலையை காட்றாங்களா நான் பாத்துக்குறேன் என்று சொல்லி அர்ச்சனா போனை போடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் அர்ச்சனா ரேணுகாவிடம் ஒரு பணப்பையை கொடுத்து இந்த நகையை திருடி நந்தினி மேல பழி போட்டோம் இப்போ என்ன பண்றோம்னா என்று சொல்லி ரேணுகாவிடம் ஐடியாவை சொல்லுகிறார்.
மறுபக்கம் நந்தினி காய்கறிகளை வாங்கிக் கொண்டு வர நகையை திருடி போன இரண்டு நபர்கள் சூர்யாவின் வீட்டிற்கு வர ரேணுகா கவனித்துக் கொண்டிருக்கிறார். சூர்யா வருவதைப் பார்த்து இவர் வேற இந்த நேரம் பார்த்து வெளியே வராரு என்று டென்ஷன் ஆக, நந்தினி அந்த இரண்டு திருடர்களை கையும் களவுமாக பிடித்துக் கொண்டு சீக்கிரம் வாங்க சூர்யா சரி என்னால புடிக்க முடியல என்று கத்தி கூப்பிடுகிறார். சூர்யாவும் வேகவேகமாக வெளியில் வருகிறார் என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
