மீண்டும் பாக்யாவின் பிசினஸ்க்கு கோபி செக் வைக்க பாக்கியா பதிலடி கொடுத்துள்ளார்.

Baakiyalakshmi Serial Episode Update 25.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. பாக்கியா ஸ்வீட்ஸ் மற்றும் காரங்களை பேக் செய்து டெலிவரி கொடுக்க சொல்கிறார்.

மீண்டும் பாக்யாவின் பிஸினஸுக்கு செக் வைக்கும் கோபி.. பாக்கியா கொடுத்த பதிலடி

பாக்யாவின் மாமனார் மற்றும் அக்கம் பக்கத்தார் இரண்டு பேர் அவருக்கு உதவி செய்கின்றனர். செல்லியும் அவரும் வீடு வீடாகச் சென்று அனைவருக்கும் கொடுத்து விட்டு வருகின்றனர்.

இந்த பக்கம் இவர்கள் பேக் செய்து கொண்டிருப்பதை பார்த்த ஈஸ்வரி அங்கு வருகிறார். செல்வி செய்த முறுக்கை சாப்பிட்டுவிட்டு நன்றாக இருப்பதாக கூறுகிறார். அப்போது செல்வி முழுக்க நினைச்சாலே எனக்கு ஒரு நடந்த கதை தான் ஞாபகத்துக்கு வருது என கூறுகிறார். தனக்கு கல்யாணம் ஆன அன்னைக்கு எங்க வீட்ல முறுக்கு செஞ்சு கொடுத்தாங்க. அங்கு இருக்கிறது ஒரே ஒரு சின்ன ரூம்தான். முதலிரவு அன்னிக்கி தட்டு புல்லா முறுக்கு வச்சுக்கிட்டு எங்க மாமியார் வாசல்ல உட்கார்ந்து திண்ணுட்டு இருந்தாங்க. என் வீட்டுக்காரி என்கிட்ட பேச வரும் போதெல்லாம் அவங்க முருக்கு திண்ற சத்தம்தான் கேட்டுச்சு.

உடனே சரி என்று நானும் ஒரு தட்டுல முறுக்கு எடுத்துட்டு வந்து சாப்பிட ஆரம்பிச்சுட்டேன். திரும்பிப் பார்க்கிறேன் அதுக்குள்ள என் புருசன் தூங்கிட்டாரு. எண்ணெய் பலகாரம் சாப்பிட்டதனால நானும் தூங்கிட்டேன்.

இன்றைய ராசி பலன்.! (25.11.2021 : வியாழக் கிழமை)

மீண்டும் பாக்யாவின் பிஸினஸுக்கு செக் வைக்கும் கோபி.. பாக்கியா கொடுத்த பதிலடி

பிறகு பாக்கியாவும் செல்வியும் வீடு வீடாக சென்று உணவுப் பொருட்களை டெலிவரி செய்து விட்டு வருகின்றனர். ராதிகா வீட்டுக்கு போன இடத்தில் மய்யூ ஏன் என்னை பார்க்கவே வரவில்லை என கேட்கிறார். ஆன்ட்டிக்கு நெறைய வேலை. தீபாவளி முடிந்ததும் ஒரு நாள் வரை என்ன சொல்கிறார். ‌‌ தீபாவளியன்று ராதிகா குடும்பத்தை தன்னுடைய வீட்டிற்கு அழைக்கிறார்.

வீட்டில் கோபி இடமெல்லாம் ஒரே எண்ணெய்யா இருக்கு கண்ட இடத்துல டப்பாவா இருக்கு என சொல்ல ஈஸ்வரியும் கூட சேர்ந்து ஆமாம் போடுகிறார். இதோட வீட்ல இந்த சமைக்கிற வேலையெல்லாம் வெச்சுகாதே. வீடு வீடா இருக்கணும். வந்தா அமைதியா இருக்கணும். அந்த சுவத்தை எல்லாம் பாரு ஒரே எண்ணெய் பிசுக்கா இருக்கு. பெயிண்ட் அடிக்கனும்னா ஒரு லட்சம் ஆகும். நீ செய்யற பலகாரத்துல வர பணம அவ்வளவு கூட வராது என சொல்கிறார்.

பிறகு பாக்கியா சமைக்கிறதுக்கு வேற இடம் பார்க்கணும் மாமா பார்த்து தரேன்னு சொல்லி இருக்காரு வாய் விடுகிறார். சுத்தலாம் உன் பேரை எழுதி வச்ச மாமனார் உனக்கு எல்லாம் செய்வார் என சொல்லிவிட்டு கோபிக்கு கிளம்புகிறார். பிறகு ஈஸ்வரி உன் பெயரில் சொத்து எழுதி வைத்தது தப்புதானே என கேட்க பாக்கியா நான் என்னத்த பண்ண போறேன் அத வச்சுகிட்டு என கூறுகிறார்.

அற்புதமான ஒரு காமெடியன் BALA – Anti Indian Producer Aadham Bava Speech

அந்த மனுஷனுக்கு இடம் வேற பார்த்து தரேன்னு சொன்னாரா இன்னைக்கி இருக்கு என சொல்லிவிட்டு ஈஸ்வரி அங்கு செல்கிறார். என்னவெல்லாம் நடக்க போகிறதோ என பாக்கியா பார்த்திருக்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியட்சுமி சீரியல் எபிசோட்.