ஜெனிக்கு நடந்த அபார்ஷனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Baakiyalakshmi Serial Episode Update 15.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ஜெனி பாத்ரூம் போனால் ரத்தமாக வருவதாக கூறி விட்டு பதட்டத்துடன் ஓடி வந்ததை அடுத்து இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாக்கியாவும் ஈஸ்வரியும் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் கிடைக்குமா? : தொடரும் தீவிர விசாரணை

செழியனால் ஜெனிக்கு நடந்த அபார்ஷன்.. அதிர்ச்சியில் குடும்பத்தினர் - பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.!!

மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்த டாக்டர் அவருக்கு அபார்ஷன் ஆகி விட்டதாக கூறியதையடுத்து ஈஸ்வரி பாட்டி கதறி அழுதார். எவ்வளவு கனவோடும் ஆசையோடும் இருந்தேன் இப்படி ஆகிடுச்சு என அழுதார். பாக்கியா அவரை சமாதானம் செய்தார். பின்னர் மயக்கத்திலிருந்து கண்விழித்த ஜெனி தனக்கு அபார்ஷன் ஆகி விட்டதை எண்ணி அழுதார். செழியன் ஜெனியின் கையை பிடித்து ஆறுதல் கூற ஜெனி வெறுப்பைக் காட்டினார்.

வீட்டிற்கு வந்த அனைவரும் நடந்ததை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டிருக்க இனியா நான் பாப்பா பொறந்தா என்னை அத்தை என்று கூப்பிடுவேன் ஆசையாய் இருந்தேன். ஆனால் ஜெனி அக்காக்கு பாப்பா பிறக்காது என அழுதார். வீட்டில் இருந்தவர்கள் இனியாவை சமாதானம் செய்தனர்.

ஐயோ.., இவள என்னால Control பண்ண முடியல – கணவருடன் Anitha Sampath Fun Shopping..! 

அதன்பிறகு பாக்கியம் ஜெனிக்கு மாத்திரை கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் எழில் உள்ளே வந்து ஜெனியிடம் நலம் விசாரித்தார். பின்னர் கோபி வந்து ஆறுதல் கூற செழியன் அப்பா என அவரை கட்டிப்பிடித்துக்கொண்டு பின் செய்தார். அனைவரும் வெளியே வர செழியன் ஜெனியை பார்க்க ஜெனி முகத்தைத் திருப்பிக் கொள்கிறார். செழியன் குழந்தை வேண்டாம் வேண்டாம் என தொடர்ந்து கூறி வந்த நிலையில் அபார்ஷன் ஆகி விட்டது. இதனால் ஜெனி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.