பாக்கியலட்சுமி சீரியலில் இனி எனக்கு காட்சிகள் குறையும் என சொல்லி கோபி ஷாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரஞ்சித் பழனிச்சாமி என்ற கதாபாத்திரத்தில் இந்த சீரியலில் என்ட்ரி கொடுத்தார்.

இவர்தான் இனி பாக்யாவுக்கு ஜோடி என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்த நிலையில் இதனை உறுதி செய்யும் விதமாக கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சதீஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது அந்த வீடியோவில் இனி கோபிக்கு காட்சிகள் குறையும் என தெரிவித்துள்ளார். ப்ரோமோ பார்த்து இருப்பீங்க ரஞ்சித் சார் என்ட்ரி. இனி அவர்தான் ஹீரோ, கிட்டத்தட்ட 800 எபிசோடுகள் ஆகிடுச்சு, எனக்கும் வயசாயிடுச்சு கொஞ்சம் ஓய்வெடுக்க போகிறேன் என தெரிவித்துள்ளார்.

இதனால் இனி பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் காட்சிகள் மிகவும் குறைவாகவே இருக்கும், இதன் மூலம் பாக்யாவுக்கு ஹீரோ ரஞ்சித் தான் என்பது உறுதியாகி உள்ளது.