
ராதிகாவிடம் சிக்கி உள்ளார் கோபி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா ஸ்வீட் செய்து அத்தை மாமாவிடம் கொடுத்து டேஸ்ட் பார்க்க சொல்ல அதற்குள் செந்தில் வந்து விட அவர்களை வரவேற்று உட்கார வைத்து ரூமில் இருக்குமாறு அனுப்பி வைக்கின்றனர்.
அதை தொடர்ந்து பழனிச்சாமியின் அம்மா வீட்டுக்கு வர அவரை வரவேற்பு உட்கார வைக்கின்றனர்.
பிறகு அமிர்தா பழனிச்சாமி சார் வரலையா என்று கேட்க அவர் என் கூட தான் வந்தான் கூச்சப்பட்டுக்கிட்டு வெளியே நிற்பான் என்று சொல்ல எழில் வெளியே சென்று பழனிச்சாமி சாரை கூப்பிட எனக்கு இந்த கல்யாணம் எல்லாம் வேண்டாம் வெட்கப்பட எழில் அவரை கூட்டி வந்து உள்ளே உட்கார வைக்கிறார். பழனிச்சாமி கூச்சப்படுவதை எல்லோரும் கலாய்க்கின்றனர்.

அதன் பிறகு பழனிச்சாமி கூச்சப்படுவதை பார்த்து இதுவரைக்கும் நீங்க பொண்ணுங்களை போய் பார்த்ததில்லையா என கேட்க அவரது அம்மா ரெண்டு பொண்ணுங்கள போய் பார்த்தான், ஒரு பொண்ணு கிட்ட தனியா பேசணும்னு சொல்லி ஒன்றரை மணி நேரம் பேசி அந்த பொண்ணு எனக்கு கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிவிட்டது.
இன்னொரு பொண்ணு வீட்டுக்கு போய் மிச்சரை பத்தி அரை மணி நேரம் பேசி அவங்க போயிட்டு வாங்க என அனுப்பி வச்சிட்டாங்க என்று சொல்லி கலாய்க்கிறார். பிறகு பொண்ணை வர சொல்லி உட்கார வைத்து பழனிச்சாமிடம் பொண்ணுகிட்ட ஏதாவது பேசணுமா என கேட்க அவர் ஆமாம் என்று சொல்ல அவருடைய அம்மா டேய் என சத்தம் போட அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க என சொல்லி உட்கார்ந்து விடுகிறார்.
பிறகு சந்திரா எனக்கு பேசணும் என சொல்லி பழனிச்சாமியை அழைத்துச் செல்கிறார். மறுபக்கம் கோபி வீட்ல பொண்ணு பார்க்க வந்திருப்பாங்க என்று புலம்பி கொண்டே செல்கிறார்.

இந்த பக்கம் பழனிச்சாமி சந்திராவிடம் எதுவும் பேசாமல் வெட்கப்பட்டு நின்று கொண்டிருக்க அவர் உட்காருங்கள் என சொல்லி உட்கார வைத்து இருவரும் ஒருவரை ஒருவர் பற்றி பேசிக்கொள்ள சந்திரா தான் படித்த படிப்புகளை பற்றி சொல்ல பழனிச்சாமி நான் ஸ்கூல் படிப்பையே தாண்டல இப்பதான் ஸ்போக்கன் இங்கிலீஷ் கத்துகிறேன் என சொல்கிறார்.
பிறகு ராதிகா கிப்ட் வாங்க மயூவை கூட்டிக்கொண்டு கடைக்குச் செல்ல கோபி இனியாவுக்கு போன் செய்து வீட்டில் என்ன நடக்கிறது என்று கேட்க பழனிச்சாமி பொண்ணு பார்க்க வந்திருக்காரு இரண்டு பேரும் ரூம்ல பேசிகிட்டு இருக்காங்கனு சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார்.
மேலும் ராதிகா இன்னைக்கு டேட் கொடுத்திருவாங்க கல்யாணத்துக்கு நம்ம மூணு பேரும் போய்ட்டு வரணும் என சொல்ல கோபி பாக்கியாவை தான் சொல்றாரோ என நினைத்து எல்லாம் பிளானோட தான் நடக்குதா என புலம்புகிறார். பிறகு ராதிகா நடித்த ஒரு விஷயம் பேசணும் என்று கோபி ஆரம்பிக்க உங்க வீட்ட பத்தி மட்டும் பேசாதீங்கனு ராதிகா கோபப்பட இல்ல கார்ல ஏசி எல்லாம் சரியா இருக்கானு கேட்க வந்தேன் என கோபி சமாளிக்கிறார்.

நல்லவேளை இவ கிட்ட எதையும் பேசல பேசி இருந்தா நம்பள கார்ல இருந்து இறக்கி நம்ம மேல கார் ஏத்திட்டு போயிடுவா என கோபி புலம்பி தள்ளுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.