கண் கலங்கி நிற்கும் ராதிகா, ஆறுதல் சொல்லும் பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!
ராதிகா கண்கலங்கி நிற்க ராதிகா ஆறுதல் சொல்லுகிறார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்யா செல்வி ஜெனி என மூவரும் பேசிக்கொண்டிருக்க பாக்யா ரெஸ்டாரண்டில் வேலை செய்யும் பெண் மீண்டும் வேலை கேட்டு வருகிறார். ஆனால் பாக்கியா இப்பதான் வேற ஒருத்தருக்கும் கொடுத்து இருக்கோம் நான் கண்டிப்பா வரும்போது சொல்றேன் என்று சொல்ல, சரிக்கா வரேன் என்று கிளம்பி அந்தப் பெண் உடனே திரும்பி ராதிகா வீட்டை விட்டு காலி பண்ண போறாங்கலாமே என்றும் மீண்டும் நீங்களும் கோபி சாரும் சேர்ந்து வாழ போறீங்கன்னு சொல்றாங்க அதுவும் நல்ல விஷயம் தான் என்று சொல்ல செல்வி உன்கிட்ட இப்ப ஏதாவது கேட்டாங்களா எதுக்கு இப்ப பேசிகிட்டு இருக்கேன்னு சொல்ல ஆம்பளைங்கன்னா தப்பு பண்ண தான் செய்வாங்க நம்ப தான் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்று சொன்ன அப்ப நாம தப்பு பண்ண ஆம்பளைங்க பொறுத்துப்பாங்களா என்று சொல்லி கோபப்படுகிறார்.
அவரை போக சொன்ன செல்வி பாக்யாவிடம் ஏன்கா எதுவுமே பேசல என்று சொல்ல இவங்க கிட்ட எல்லாம் பேசி என்ன ஆகப்போகுது பேசுறவர் கிட்ட பேசணும் கோயிலுக்கு போயிட்டு வரட்டும் என்று சொல்லி இருக்கிறார். மறுபக்கம் கோவிலில் ஈஸ்வரி கோபி என அனைவரும் ஜாலியாக பேசிக் கொண்டிருக்க இனியா கோவிலை வீடியோ எடுக்கிறார். பிறகு பாக்யா போன் பண்ண சொன்னது ஞாபகம் வந்ததும் வீடியோ கால் பண்ணி பாக்யாவிடம் இனியா பேசுகிறார். நலம் விசாரித்துவிட்டு உங்க அப்பா கிட்ட போன கூட பேசணும் என்று பாக்யா சொல்ல நேரிலேயே பேசமாட்ட எதுக்கு போன்ல பேசணும்னு சொல்ற என்று கேட்கிறார்.
முக்கியமான விஷயம் கொடு என்று சொல்ல முதல்ல என்கிட்ட சொல்லு என்று சொல்லுகிறார். ராதிகா வீட்டு காலி பண்றாங்க அது அவர்கிட்ட சொல்லனும் என்று சொல்ல இனியா டாடி இங்கே இல்லை என்று பொய் சொல்கிறார். ரூமுக்கு போய் கொடுக்கிறேன் என்று சொல்லி போனை வைத்துவிட்டு ஈஸ்வரி இடம் வந்து சொல்லுகிறார். உடனே ஈஸ்வரி சந்தோஷப்பட்டு இந்த விஷயம் வீட்டுக்கு போற வரைக்கும் யாரும் கோபி கிட்ட சொல்லக்கூடாது என்று சொல்லுகிறார் உங்க அம்மாவோட போனும் நீங்க அட்டென்ட் பண்ணாதீங்க என்று சொல்லுகிறார். பாக்யா போன் பண்ணி கொண்டே இருக்க யாரும் எடுக்காமல் இருக்கின்றன.
ராதிகா வீட்டில் இருக்கும் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, மயு மற்றும் ராதிகாவின் அம்மாவிடம் நீங்க ரெண்டு பேரும் புது வீட்டுக்கு போங்க இன்னும் கொஞ்சம் திங்ஸ் அனுப்பிட்டு ஹவுஸ் ஓனர் கிட்ட அட்வான்ஸ் வாங்கிட்டு வந்துடறேன் என்று சொல்ல மயூ எனக்கு இந்த வீடு ரொம்ப புடிச்சிருக்கு மம்மி இந்த வீட்ல நம்ம எவ்வளவு சந்தோஷமா இருந்தோம் டாடி நம்ம புது வீட்டுக்கு வர மாட்டாரா என்று எல்லாம் கேட்க ராதிகா நீ அங்க போயிரு மயு நான் வந்துறேன் என்று சொல்லி புட் ஆர்டர் பண்ற சாப்பிடுங்க என்று சொல்ல, ராதிகாவின் அம்மா நீ சந்தோஷமா இருக்குறது என்னால பாக்கவே முடியாதா என்று சொல்லி அழுகிறார். மாப்ள வந்த உடன் போகலாம் என்று மீண்டும் சொல்ல இதுக்கு மேல அவர் கிட்ட சொல்லி எந்த முடிவு எடுக்கப் போறது இல்ல என்று சொல்லி அவர்களை அனுப்பி வைக்கிறார். வீட்டுக்கு வந்த ராதிகா கல்யாண போட்டோவை பார்த்து நடந்ததை நினைத்து பார்க்கிறார்.
செல்வி பாக்கியாவிடம் ராதிகா எல்லா பொருளை அனுப்பிட்டாங்களா அவங்க மட்டும் தனியா இருக்காங்க மயூவையும் அவங்க அம்மாவையும் புது வீட்டுக்கு அனுப்பிட்டாங்க என்று பாக்யாவிடம் சொல்லிய பிறகு இதெல்லாம் கோபி சாருக்கு தெரியுமா என்று பாக்யாவிடம் கேட்கிறார். அதுதான் எனக்கும் தெரியல போன் பண்ணா யாரும் எடுக்க மாட்டாங்க அவங்க பாட்டி அவங்களை எடுக்க வேணாம்னு சொல்லிட்டு இருப்பாங்க என்று சொல்லுகிறார். உடனே பாக்கியா நான் போய் ராதிகாவை பாத்துட்டு வரேன் என்று சொல்லி ராதிகாவுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு செல்கிறார்.
அங்கு பார்த்தால் ராதிகா வெறும் தரையில் படுத்து கொண்டிருக்க பாக்யா வந்து சாப்டீங்களா என்று கேட்டு சாப்பாடு கொடுக்கிறார். பாக்கியாவின் சாப்பாட்டை சாப்பிட்ட ராதிகா என்ன சொல்லுகிறார்? பாக்கியா என்ன கேட்கிறார்? அதற்கு ராதிகாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.