பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த விஷ்ணு, ப்ரொபோஸ் செய்த சௌந்தர்யா,வெளியான முதல் ப்ரோமோ..!!
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் விஷ்ணு பிக் பாஸ் வீட்டிற்கு வர சௌந்தர்யா வில் யு மேரி மீ என்று ஒரு பிளேட்டில் எழுதி அதை விஷ்ணுவிடம் கொடுத்து ப்ரப்போஸ் செய்கிறார். விஷ்ணு வெக்கப்பட்டு இந்த மாதிரி ஒரு மொமென்ட் என் லைஃப்ல நடந்தது கிடையாது என்று சொல்ல சௌந்தர்யாவும் என் லைஃப்லயும் நடந்தது இல்லை என்று சொல்லுகிறார். எனக்கு பிளாங்காயிடுச்சு நான் உங்களை சர்ப்ரைஸ் பண்ண வந்தா என்று சொல்ல போட்டியாளர்கள் கத்தி சந்தோஷப்படுகின்றனர்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது
View this post on Instagram