ரோகினியை வெளுத்து வாங்கிய விஜயா, வேடிக்கை பார்த்த மனோஜ், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.
ரோகினியை விஜயா வெளுத்து வாங்க மனோஜ் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்கிறார்.
![siragadikka asai serial today episode update 27-12-2024](https://kalakkalcinema.com/wp-content/uploads/2024/12/siragadikka-asai-serial-today-episode-update-27-12-2024-2.jpeg)
தமிழ் சின்ன திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜின் சட்டையைப் பிடித்து விஜயா இந்த உண்மையை ஏன் என்கிட்ட இந்த மறைச்ச என்று கேட்க மனோஜ் இது எல்லாம் ரோகினி கொடுத்த ஐடியா தான்மா என்று சொல்லி ரோகிணியை கோர்த்து விடுகிறார். உடனே ரோகிணியே பார்த்துக் கொண்டே விஜயா சென்று கன்னத்தில் அறைகிறார்.
எதுக்குடி இந்த விஷயத்தை மறைச்ச என்று கேட்க, மனோஜ் படிச்சிருக்கானே தவிர எந்த வேலைக்கும் போகல நான் இதை பண்ணலனா அவன் இன்னும் பார்க்கல படுத்துட்டு தூங்கிட்டு தான் இருந்திருப்பான். இது மட்டும் இல்லாம நிறைய ஜாப் ஆஃபர் வந்தது நான் சொல்லியும் நான் ஓனரா தான் இருப்பேன்னு சொல்லி எங்கேயோ வரல அதனாலதான் இப்படி பண்ண என்று சொல்ல, அப்ப அம்மாவா நான் எதுவும் பண்ணலையா என்று சொல்லி இன்னொரு அரை விடுகிறார்.
உடனே ரோகினி மனோஜை திரும்பிப் பார்க்க அவர் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்கிறார். சுருதி ரெண்டு பேருமே தானே தப்பு பண்ணாங்க ஒருத்தரும் மேல மட்டும் எதுக்கு பனிஷ்மென்ட் கொடுக்கணும் என்று சொல்ல கரெக்ட் என்று முத்து சொல்லுகிறார். பாத்தியாடி உன்னால எல்லாம் என்னை கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட ரோகினி மாதிரி ஒரு மருமக கிடைத்ததுன்னா ரொம்ப பெருமையா பேசிக்கிட்டு இருந்த மீனா கிட்ட ஆனால் இப்படி என் மூஞ்சில கரிய பூசிட்டல்ல என்று இன்னொரு வாட்டி அடிக்க போக அண்ணாமலை அவரை தடுத்து நிறுத்துகிறார்.
பிறகு பிறகு ரோகினியை ரூமுக்கு போக சொல்ல அண்ணாமலை விஜயாவை சமாதானப்படுத்துகிறார் என்னமோ இவ இல்லனா என் புள்ள வளர்ந்து இருக்கவே மாட்டான்ற மாதிரி பேசுறா அவன படிக்க வச்சு வளர்த்தது யாரு என்று கேட்டு கோபப்படுகிறார். கொஞ்ச நேரம் கழித்து மனோஜ் ரூமுக்கு போக இருக்க விஜயா அவரை தடுத்து நீ அங்க போகக்கூடாது போய் உட்காரு என்று சொல்லி அனுப்பி விடுகிறார். மீனா போக மீனாவையும் திட்டி போகக் கூடாது என்று சொல்ல, ரோகினி உள்ளே அழுது கொண்டு இருக்கிறார்.
மீனா கிச்சனில் டீ போட்டுக் கொண்டிருக்க முத்து இப்படி எல்லாம் நடக்கும் நான் எதிர்பார்க்கவே இல்லை அம்மா பார்லர் அம்மாவை அடிப்பாங்கன்னு நான் நினைக்கல வந்து சொல்லுகிறார். உடனே நீங்க ஆதாரம் கொண்டு வரலைனா அவங்க இதுவரையும் நம்பி இருக்க மாட்டாங்க போய் தான் சொல்லி இருப்பாங்க என்று சொல்ல கண்டிப்பாக என்று பேசிக் கொண்டிருக்கும்போது சுருதியும் ரவியும் வருகின்றனர். அவர்களும் ஆன்ட்டி அடிப்பார்கள் என்று நினைக்கல ஆனா வான் பண்ணி விட்டு இருக்கலாம் அதுவும் இல்லாம அடிக்கவும் முடிவு பண்ணி இருந்தா ரெண்டு பேரையும் அடிச்சிருக்கணும் அவங்க புள்ளைய மட்டும் சேவ் பண்ணிட்டு அடுத்த வீட்டு பொண்ணு மேல பழைய தூக்கி போட்டு கோவத்தை காட்டிட்டு போறாங்க என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த நேரம் பார்த்து மனோஜ் பிரிட்ஜ் திறக்க வர இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை மறைந்து நின்று பார்க்கிறார் முத்து ஆக மொத்தம் ஜீவாவும் இவனுக்கு திறமை இல்லா என்று சொல்லி விட்டுட்டு போனதாகவும் அதே மாதிரி இவன் பொண்டாட்டியும் இவனுக்கு திறமை இல்லை என்றதையும் சொல்லிட்டாங்க என்று சொன்னதை கேட்கிறார். ஆனால் ஸ்ருதி இருந்தாலும் ரோகிணி அடி வாங்கும்போது இவர் அமைதியாக அவங்க மேல பழைய போட்டுட்டு நின்னுகிட்டு இருக்காரு வொர்ஸ்ட் ஹஸ்பண்ட் என்று சொல்லுகிறார். இதையெல்லாம் கேட்ட மனோஜ் ரோகினியை பார்க்க ரூமுக்கு சொல்லுகிறார்.
மனோஜ் ரோகினி என கூப்பிட எதுக்கு இப்ப என்கிட்ட பேச வந்த பேசாத என்று கோபப்படுகிறார்.அவ்வளவு பேரும் முன்னாடி உங்க அம்மா அடிக்கும்போது வேடிக்கை பார்த்து நின்னுட்டு இருந்த ஒரு வார்த்தை எனக்காக பேசுனியா, என்று கேட்க நீ கூட தான் என்ன பத்தி தப்பா பேசினா அதுக்காக தான் அம்மா கோபப்பட்டாங்க என்று சொல்லுகிறார்.
கோபப்பட்ட ரோகினி என்ன சொல்லுகிறார்?அதற்கு மனோஜ் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
![siragadikka asai serial today episode update 27-12-2024](https://kalakkalcinema.com/wp-content/uploads/2024/12/siragadikka-asai-serial-today-episode-update-27-12-2024-3.jpeg)