சுந்தரவல்லியிடம் உளறிய அருணாச்சலம், நந்தினிக்கு வந்த சந்தேகம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சூர்யாவிற்காக நந்தினி கஞ்சி செய்து கல்யாணத்திடம் கொடுக்க சொல்லுகிறார். ஆனால் நான் கொடுக்கறது எப்படி இருக்கும் நீ கொடுக்கிறது எப்படி இருக்கும் நீயே கொண்டு போய் கொடு என்று சொல்ல அவரும் சூர்யாவிற்கு கொடுக்கிறார். கஞ்சி என்று சொல்ல பாட்டி செஞ்சாங்களே அதுவா என்று கேட்கிறார் அது இல்ல இது சுடு கஞ்சி என்று சொல்லி குடிக்க சொல்லிவிட்டு நந்தினி சென்று விடுகிறார். பிறகு சூர்யா கஞ்சியை குடித்துவிட்டு டேஸ்டாக இருப்பதாக சொல்லுகிறார்.
மறுபக்கம் நால்வரும் காரில் வர அம்மாகிட்ட இருந்து எப்படியோ எடுத்துட்டோமென்று பேசிக்கொண்டு வருகின்றனர். அம்மா பார்த்து இருந்தா என்ன ஆயிருக்கும் என்று சுரேகா கேட்க அருணாச்சலம் அவ்வளவுதான் என்று சொல்லுகிறார். பிறகு அருணாச்சலம் நா அவ்வளவு கவனமாக வைத்திருந்தேன் உங்க கண்ணுக்கு எப்படிப்பட்டது என்று சொல்ல நீங்க எடுத்துக்கிட்டு போகும்போது, ஒன்னு மட்டும் கீழ விழுந்து இருந்தது அம்மா கண்ணுல மாட்டாம எங்க கண்ணுல மாட்டினது நல்லதா போச்சு என்று பேசிக் கொண்டே இருக்க மாதவி அந்த பத்திரிக்கையை நான் டேபிள் மேலே வைத்து விட்டேன் என்று சொல்ல அருணாச்சலம் பதற்றம் ஆகி வேகமாக ஓட்டி வருகிறார்.
கஞ்சி குடித்துக் கொண்டிருந்த சூர்யா கல்யாண பத்திரிக்கையை எடுத்து படித்துவிட்டு இது என்னோட கல்யாண பத்திரிக்கையா இது வரை நான் பார்க்கவே இல்லையே என்று யோசிக்கிறார். இது என்ன புதுசா இருக்கு என்று நினைத்து நந்தினியை கூப்பிட நந்தினி வராததால் அவரே உள்ளே வருகிறார். நந்தினி விளக்கிற்கு எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்க, இது எப்படி நம்ம வீட்ல இருக்கு என்று நீட்டுகிறார். உடனே கையில என்னையா இருக்கு நீங்களே படிங்க என்று சொல்லுகிறார்.
உடனே சூர்யா பத்திரிக்கையின் முதலில் இருந்து படிக்க ஆரம்பிக்க அருணாச்சலம் வேகவேகமாக உள்ளே வந்து சூர்யாவின் கையில் இருக்கும் பத்திரிக்கையை வாங்கி அவரை வேகவேகமாக உள்ளே அழைத்துச் சென்று விடுகிறார். உடனே மாதவி உன்கிட்ட ஏதாவது சொன்னா நான் என்று சொல்ல அவரோட பத்திரிக்கையை படிச்சு காமிச்சுக்கிட்டு இருந்தாரு என்று சொன்னவுடன் சரி நீ போய் வேலையை பாரு என்று அனுப்பி வைக்கின்றனர். சூர்யாவிடம் அருணாச்சலம் இந்த பத்திரிக்கையை அடிச்சது நான்தான் என்று சொல்லுகிறார். எதற்காக இதெல்லாம் பண்ணனும் என்று கேட்க ரிஜிஸ்ட்ரேஷன் பண்றதுக்காக தான் நான் இவ்வளவும் பண்ணேன் என்று சொல்ல, நானும் இங்கே தான் இருக்கேன் நந்தினியும் இங்கதான் இருக்கா அப்ப எதுக்கு ரிஜிஸ்ட்ரேஷன் என்று கேட்க உங்க அம்மா நந்தினி எப்ப வேணா வெளிய அனுப்பவா ஆனா ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணா ஒன்னும் பண்ண முடியாது சரியா என்று சொல்ல சூர்யா 100% ஓகே என்று சொல்லுகிறார்.
நான் சொல்ற வரைக்கும் இந்த விஷயத்தை நந்தினி கிட்ட சொல்லக்கூடாது என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். பிறகு அருணாச்சலம் ரெஜிஸ்டர் செய்வது குறித்து லேப்டாப்பில் அப்ளை செய்கிறார். அப்ளை செய்த உடனே அவருக்கு போனில் நாளைக்கு பத்திரப்பதிவு ஆபீசுக்கு வருமாறு மெசேஜ் வருகிறது. உடனே அருணாச்சலம் நாளைக்கு பத்து மணிக்கு சீக்கிரமா போகணும் என்று யோசித்துக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சுந்தரவல்லி வருகிறார். அருணாச்சலத்திடம் நாளைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு அதை மட்டும் அட்டென்ட் பண்ணுங்க என்று சொல்ல, நாளைக்கு வேண்டாம் அடுத்த நாள் வேணா பாத்துக்கலாம் என்று சொல்ல ,நான் வேற டயர்டா வந்த நீங்க என்ன என்னமோ சொல்லிக்கிட்டு இருக்கீங்க என்று சொல்ல டையாடா இருக்குல போய் தூங்கு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
ரூமில் சுரேகா மாதவி மற்றும் அசோகன் என மூவரும் என்னதான் அப்பா சொன்னாலும் நம்ம எல்லாத்துக்கும் தலையாட்டி கிட்டு இருக்க கூடாது யோசிச்சு தான் பண்ணனும் என்று சொல்லுகிறார். என்னக்கா பண்ணலாம் என்று கேட்க நந்தினி ரிஜிஸ்டர் பண்ண இந்த வீட்ல நந்தினி இருப்பானு அப்பா நம்புறாரு, நம்மளுக்கும் அதுதான் தேவை, அதனால இந்த விஷயத்துல விட்டுடலாம். இதுக்கப்புறம் வரது எதுவா இருந்தாலும் யோசிச்சு தான் பண்ணனும் என்று சொல்லிக் கொண்டிருக்க அருணாச்சலம் நாளைக்கு காலைல ரிஜிஸ்ட்ரேஷன் இருக்கு என்று சொல்லி கிளம்ப வேண்டும் என்று சொல்லுகிறார். சூர்யா கிட்ட சொல்லிட்டீங்களா என்று சொல்ல ரிஜிஸ்ட்ரேஷன் விஷயம் சொல்லிட்டேன். ஆனா நாளைக்கு போகணும் என்கிற விஷயத்தை இன்னும் சொல்லல, மாதவி நந்தினி கிட்ட சொல்லிட்டீங்களா என்று கேட்க இன்னும் இல்லை என்று சொல்லுகிறார். இது மட்டுமில்லாமல் நாளைக்கு காலைல சுந்தரவல்லிக்கு சந்தேகம் வராம நம்ம கிளம்பிடனும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். பிறகு ரூமில் சூர்யா உட்கார்ந்து கொண்டிருக்க நந்தினி இடம் காலைல ஒரு கஞ்சி செஞ்சு குடுத்தியே அது சூப்பர் இனிமே அது எனக்கு அடிக்கடி செஞ்சு கொடு சரியா என்று சொல்ல நந்தினியும் சரி என தலையாட்டுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நான் எப்படி சம்பந்தமே இல்லாமல் கையெழுத்து போடுவது என்று நந்தினி அருணாச்சலத்திடம் கேட்க நீயும் எங்க குடும்பத்துல ஒரு பொண்ணுதான் என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் சுந்தரவல்லி இடம் நீ ஒரு பக்கம் போக போற நான் ஒரு பக்கம் போ போறேன் என்று சொல்ல எங்க போ போறீங்க அது சுந்தரவல்லி கேட்க ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு என்று சொல்லுகிறார். சூர்யா நந்தினிக்கு பூ வாங்கி கொடுக்க, நீங்க இப்படி எல்லாம் பண்ண மாட்டீங்களே என்று சந்தேகப்படுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.