பாக்கியா எடுத்த முடிவு, கவுன்சிலர் பதில் என்ன? இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியாவின் முடிவிற்கு கவுன்சிலர் பதில் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

baakiyalakshimi serial today episode update 23-05-25

baakiyalakshimi serial today episode update 23-05-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சுதாகர் பாக்யா குடும்பத்தினரிடம் பெரிய கேசா இருக்கு மினிஸ்டர் வரைக்கும் மூவ் பண்றாங்க என்றெல்லாம் சொல்லி பயமுறுத்த என்னால எதுவும் பண்ண முடியாது என்பது போல பேசுகிறார் உடனே பாக்கி அங்கிருந்து வெளியில் போக ஈஸ்வரி பின்னாலே வந்து எங்க போற என்று கேட்கிறார் என் பையன கூட்டிட்டு வர போறேன் என்று சொல்ல இனியாவோட மாமனாராலே செய்ய முடியாதது உன்னால செய்ய முடியுமா என்று கேட்கிறார். என் பையன் ஜெயில்ல இருக்கான் இப்போ அவனை யாராவது கூட்டிட்டு வருவாங்க என்று என்னால பாத்துட்டு இருக்க முடியாது அதனால நானே போக போறேன் என்று சொல்லி செல்வியுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறார்.

அங்கே இன்ஸ்பெக்டருக்காக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் கொஞ்ச நேரத்தில் இன்ஸ்பெக்டர் வந்து விடுகின்றனர் என்ன விஷயம் என்று கேட்க நாங்க கவுன்சிலர் மேல கம்ப்ளைன்ட் கொடுக்கணும் என்று சொல்லுகிறார். உங்க பையன் பண்ணது மட்டும் சரியா என்று கேட்க அவரு தப்பு தப்பா பேசி இருக்காரு குடிச்சுட்டு வந்து இதுக்கு முன்னாடி பிரச்சனை பண்ணி இருக்காரு அப்ப நீங்க ஏன் சொல்லல என்று கேட்க பிரச்சனை வேணாம்னு தான் நாங்க அமைதியா இருந்தோம் என்று சொல்லுகிறார். உடனே இன்ஸ்பெக்டர் சரி கம்பெனி கொடுத்துட்டீங்க இல்ல நாங்க பார்த்துக்கிறோம் கிளம்புங்க என்று சொல்ல செழியனை பார்க்க வேண்டும் என்று பாக்யா கேட்க அதெல்லாம் முடியாது நீங்க கிளம்புங்க என்று சொல்லி அனுப்பி விடுகின்றனர்.

வீட்டில் கோபி ஈஸ்வரி ஜெனி மூவரும் உட்கார்ந்து கொண்டிருக்க ஈஸ்வரி ஜெனி இடம் சாப்பிட சொல்லுகிறார் எனக்கு வேண்டாம் பாட்டி என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து பாக்யா வருகிறார் செழியனை கூட்டிட்டு வருவேன்னு சொன்ன என்ன ஆச்சு என்று கேட்க அவன் வரத்துக்கு என்ன செய்யணுமோ அதை தான் செஞ்சுட்டு வந்து இருக்கேன்னு சொல்லுகிறார் என்ன செய்து இருக்க என்று கேட்க அந்த நேரம் பார்த்து ஜெனியின் அப்பா டென்ஷனாக போன் பேசிக்கொண்டே வீட்டுக்கு வந்து நீங்க என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க செழியனை வீட்டுக்கு கூட்டிட்டு வர ஐடியாவே உங்களுக்கு இல்லையா நிரந்தரமா ஜெயில்ல வைக்க பாக்கறீங்களா என்று கேட்கிறார். உடனே ஜெனி நீங்க என்ன ஆன்டி பண்ணீங்க நீங்க பண்ணதெல்லாம் போதும் இதுக்கு அப்புறம் எதுவும் பண்ணாதீங்க என்று சொல்ல ஈஸ்வரி என்னாச்சு என்று கேட்க நான் எப்படியாவது அந்த கவுன்சிலர் கிட்ட பேசி கேச வாபஸ் வாங்கலாம்னு போராடிகிட்டு இருந்தா இவங்க அந்த கவுன்சிலர் மேலேயே கேஸ் கொடுத்து வச்சிருக்காங்க என்று சொல்லுகிறார். குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அதிர்ச்சியாக பாக்கியாவை எதுக்காக இப்படி பண்ண என்று கேட்கின்றனர். உடனே ஜெனி அழ இதுக்காக தான் இங்க வந்த என்று சொல்லிவிட்டு இங்கிருந்து போகலாம் நீ போய் பாப்பாவ தூக்கிட்டு வா என்று சொல்லுகிறார். உடனே ஈஸ்வரி எதுக்கு என்று கேட்க, ஜெனி நான் வந்துறேன் பா என்று சொல்லி முடிவெடுக்கிறார் உடனே கோபி அமைதியாக விடுங்கம்மா செழியன் வர வரைக்கும் ஜெனி அங்கே இருக்கட்டும் என்று சொல்ல, ஜெனி குழந்தைகளை அழைத்துக் கொண்டு வருகிறார் உடனே ஜெனி அப்பா பாக்யாவிடம் உங்க பையன் வெளியே வரணும்னு நினைச்சீங்கன்னா முதல்ல போய் கேசவாபஸ் வாங்குங்க என்று சொல்லிவிட்டு ஜெனியையும் குழந்தையும் அழைத்துக்கொண்டு சென்று விடுகிறார். உன்னால இந்த வீட்ல என்ன என்ன நடக்க போகுதோ தெரியல என்று ஈஸ்வரி திட்டிவிட்டு சென்று விடுகிறார். மறுநாள் காலையில் செல்வியும் பாக்யாவும் அமைச்சர் வீட்டுக்கு வருகின்றனர்.

இவங்க ரெஸ்டாரன்ட் தொறக்க வந்த போது எந்த உதவியா இருந்தாலும் என்கிட்ட தயங்காம கேளுன்னு சொல்லி இருக்காங்க இப்ப சரியான வெளியே கொண்டு வரதுக்கு உங்ககிட்ட பேசுறது விட்டா வேற வழி இல்ல என்று சொல்லி உள்ளே வந்து விசாரிக்க அவர் டெல்லிக்கு போய்விட்டுதாக சொல்லுகின்றனர் பிறகு போன் பண்ணி பேச இரண்டு மூன்று நாள் ஆகும் என்று சொல்ல செல்வி எனக்கு தெரிஞ்சு சாட்சிக்காரர் காலில் விழுவதை விட சண்டக்காரன் காலிலேயே விழுந்துவிடலாம். அந்த கவுன்சிலர் கிட்டயே போய் பேசிப் பார்க்கலாம் என்று முடிவெடுத்து இருவரும் அந்த வீட்டுக்கு வருகின்றனர்.

கவுன்சிலர் என்ன சொல்லுகிறார்? அதற்கு பாக்யாவின் பதில் என்ன? கேஸை வாபஸ் வாங்குவாரா. இல்லையா? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial today episode update 23-05-25

baakiyalakshimi serial today episode update 23-05-25