சீதா விஷயத்தில் முத்து எடுத்த முடிவு.. மீனா சொன்ன வார்த்தை, இன்றைய சிறக்கடிக்க ஆசை எபிசோட்!!

சீதா மற்றும் அருண் விஷயத்தில் முத்து முடிவெடுத்துள்ளார்.

siragadikka asai serial today episode update 23-05-25
siragadikka asai serial today episode update 23-05-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா மற்றும் அருண் பேசிக் கொண்டிருக்க முத்துவும் மீனாவும் கோவிலுக்கு வருகின்றனர் உடனே மீனா பூ வாங்கிட்டு வர நீங்க போங்க என்று சொல்ல முத்து சாமி கும்பிட்டு விட்டு திரும்ப அருணை கவனித்து விடுகிறார் அருணும் முத்துவை பார்த்துவிட இருவரும் முறைத்துக் கொள்கின்றனர். உடனே முத்து இங்கிருந்து போகணும் நல்ல விஷயத்துக்கு வந்தா இவனை பாக்குற மாதிரி ஆகுது என்று டென்ஷனாக பேசிக் கொண்டிருக்க மறுப்பக்கம் அருண் நம்ப வேற எங்கேயாவது போய் பேசலாம் இங்க அந்த ரவுடி பையன் வந்திருக்கான் என்று சீதாவிடம் சொல்ல அக்காவும் மாமாவும் வந்துவிடட்டும் அப்புறம் நம்ம ஹோட்டல் போகலாம் என்று சொல்லி முடிவெடுக்கின்றனர்.

உடனே மீனாவும் பூ வாங்கிக் கொண்டு வந்து விட இருவரும் சாமி கும்பிட்டு விட்டு திரும்பி பார்க்க சீதா நின்று கொண்டிருக்கிறார் உடனே அவர்கள் வந்தவுடன் சீதா அருணைக் கூப்பிட்டு நிற்கவைக்க இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.அருண் முத்து இருவரும் நேருக்கு நேராக முறைத்துக் கொண்டு நிற்க சீதா இருவர் பற்றியும் அறிமுகப்படுத்தி வைக்கிறார் ஆனால் எதுவும் பேசாமல் மூவரும் அமைதியாக இருக்க முத்து கையில் இருக்கும் பழங்களை கீழே போட்டுவிட்டு கோபமாக சென்று விடுகிறார். என்னாச்சுக்கா என்று சீதா கேட்க இவ்வளவு நேரமா இவரு ரவுடினு சொல்லிக்கிட்டு இருந்தது உங்க மாமாவை தான் என்று சொல்ல அருண் இவர் தான் உன் மாமாவா இவரால தான் நான் ரெண்டு வாட்டி சஸ்பெண்ட் ஆன என்று சொல்லி கோபப்பட மீனா முத்துவின் பின்னாலே சென்று பேசி பார்க்கலாம் என்று சொல்ல சீதா நல்ல பையனா தான் தேர்ந்தெடுத்து இருப்பான்னு நினைச்சேன் இப்படி ஒருத்தனை தேர்ந்தெடுத்து வச்சிருக்கா இதெல்லாம் சரிப்பட்டு வராது இவன் கூட சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கை நல்லா இருக்குமா என்று கோபமாக காரில் ஏறி சென்று விடுகிறார்.

உடனே மீனா கோவிலுக்குள் வந்து சீதாவை வலு கட்டாயமாக இழுத்துச் சென்று விட முத்து நேராக மீனாவின் அம்மாவை வீட்டிற்கு சென்று சந்திக்கிறார் சீதா இப்படி பண்ணுவா என்று நினைக்கல புத்திசாலி பொண்ணுதான் நெனச்சேன் என்று சொல்ல என்னாச்சு மாமா என்று சத்தியா கேட்க சீதா ஒரு பையனை லவ் பண்றா என்று சொன்னவுடன் சந்திரா எனக்கு ஏற்கனவே ஒரு நெருடலாக இருந்தது அவ கொஞ்ச நாளா பண்றது எதுவுமே சரி இல்ல என்று சொன்னால் லவ் பண்றது தப்பு இல்ல அத்தை யாரை லவ் பண்றதுல தான் இருக்கு என்கிட்ட வம்பை வைத்துக்கொண்டே இருப்பான்னு ஒரு கான்ஸ்டபிள் சொன்னால அவனை போய் லவ் பண்றா என்று சொல்ல அவர் பேரு அருணா என்று கேட்க ஆமாம் என்று சொல்லுகிறார் உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்க அவங்க அம்மா சீதா ஹாஸ்பிடல் தான் வந்து பார்ப்பாங்க அதனால தெரியும் என்று சொல்லுகிறார்.

சீதாவுக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம் அவ இவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்க மாட்டா அவன் பதவியை வைத்துக்கொண்டு பழி வாங்கணும்னு சுத்திக்கிட்டு இருக்கான் நீங்க என் மேல நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா? நான் சீதாவுக்கு நல்ல மாப்பிள்ளை கூட்டிட்டு வருவேன் என்னை நம்புங்க இவளை விட படிச்ச நல்ல மாப்பிள்ளையா பார்த்து சீதாவுக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன் என நம்புகிறீர்களா என்று கேட்க நம்பர மாப்பிள்ளை என்று சொன்னால் சீதா வந்தா பேசுவேன் நான் கிளம்பறேன் இல்லனா சொல்லிவிட்டு சென்றுவிட சந்திரா கண்கலங்கி உட்கார கொஞ்ச நேரத்தில் சீதாவும் மீனாவும் வருகின்றனர்.

சீதா உள்ளே வந்தவுடன் சந்திரா சீதாவை அடைக்க மீனா தடுக்கிறார். பிறகு மீனா என்ன சொல்லுகிறார்? அதற்கு சந்திராவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial today episode update 23-05-25
siragadikka asai serial today episode update 23-05-25