நந்தினிக்கு வரும் சந்தேகம், சூர்யா செய்த விஷயம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா கல்யாணத்தை கூப்பிட்டு அதை எடுத்துட்டு வா என்று சொல்லுகிறார். மறுபக்கம் நந்தினி என்ன பண்ணப் போறாரோ என்று பயப்பட சூர்யா கோல்ட் காயினை வேலை செய்பவர்களுக்கு பரிசாக கொடுக்கிறார். உடனே அவர்கள் இன்னைக்கு தங்க விக்கிற வேலைக்கு எங்களால ஒரு குண்டுமணி கூட வாங்க முடியாது இது நீங்க கொடுத்த மிகப்பெரிய பரிசு ரொம்ப நன்றி என்று சொல்லிவிட்டு கிளம்பப் போக அவர்களை நிற்கச் சொல்லுகிறார். இதுக்கு அப்புறமா முக்கியமான வேலை இருக்கு என்று சொல்லி நந்தினியிடம் சிங்காரத்தை அழைத்து வரச் சொல்லுகிறார். உடனே கல்யாணம் மாலையை எடுத்துக் கொண்டு வர சூர்யா சிங்காரம் கழகத்தில் மாலை போட அனைவரும் கைத்தட்டுகின்றனர்.
இதையெல்லாம் பார்த்து சுந்தரவல்லி கடுப்பாகி நிற்க, சிங்காரத்திற்கும் கோல்ட் காயின் பரிசு கொடுக்கிறார். உடனே சிங்காரம் மாலையை கழட்ட சூர்யா வேண்டா என்று சொல்லுகிறார். இவருக்கு எதுக்கு மாலை மரியாதை செய்ரேனா அதுக்கு காரணம் இருக்கு இவரைப் பற்றி தெரியாத விஷயம் உங்களுக்கு சொல்றேன் என்று சொல்லுகிறார். இவர் தான் என்னோட அருமையான மாமனார் என்று சொல்லியும் இவ தான் நந்தினி இவருடைய பொண்ணு என்னோட பொண்டாட்டி என்று சொல்ல,சுந்தரவல்லி மேடத்தோட சம்பந்திதான் எங்க வீட்டோட செக்யூரிட்டி என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
எங்களால நம்பவே முடியல அவ்வளவு பெரிய வசதியா இருக்கிற குடும்பத்திலிருந்து செக்யூரிட்டி வீட்ல போன் எடுத்து இருக்கீங்க என்று சொல்ல இதுக்கு எல்லாத்துக்கும் காரணம் என்னோட தாய்க்குலம் தான் என்று செல்ல சுந்தரவல்லி கோபமாக சென்று விடுகிறார். உடனே கொஞ்ச நேரத்தில் அவர்கள் சூர்யாவை பாராட்டி பேசிவிட்டு சிங்காரத்திடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கிளம்புகின்றனர். உடனே சூர்யாவை அருணாச்சலமும் பாராட்டுகிறார். உன்ன நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு சூர்யா, எல்லா செக்யூரிட்டிக்கும் கொடுத்த மரியாதை ரொம்ப சூப்பர் எனக்கே இதுவரை இது மாதிரி தோணல. செக்யூரிட்டி ஓட கஷ்டம் என்ன அவங்களோட வாழ்க்கை எப்படி என்றது எனக்கு தெளிவா பேசி இருக்க நீ எப்பவுமே இதே மாதிரி இரு என்று சொல்லிவிட்டு கிளம்பு அந்த நேரம் பார்த்து சிங்காரம் நந்தினி வருகின்றனர்.
எதுக்குயா இது மாதிரி பண்ணீங்க எனக்கு சங்கடமா போயிடுச்சு என்று சிங்காரம் சொல்ல, அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல என்று சொல்ல, நான் அப்பாவை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன் என்று சொல்ல சூர்யா எதுக்காக என்று கேட்கிறார். ஏற்கனவே இப்பதான் ஒரு பிரச்சனை முடிஞ்சிருக்கு இங்க இருக்கிறவங்க என்ன நெனச்சு இருக்காங்க என்று தெரியல அதனால நான் இவரை கூட்டிட்டு போயிட்டு விட்டு வரலாம் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். மறுபக்கம் சுந்தரவல்லி கோபமாக இருக்க மாதவி வருகிறார். நீங்க எதுக்குமா ஓடி ஒளிஞ்சி உக்காந்திருக்கீங்க என்று கேட்க அது என்னோட அகராதியிலேயே இல்லை என்று சொல்லுகிறார். நம்ம நந்தினி மேல தான் கோபப்படனும் அவ காரியக்காரி என்று சொல்ல அது எனக்கு தெரியாதா தோட்டக்காரியா இருந்தவ சூர்யாவ மயக்கி கல்யாணம் பண்ணி இருக்கா எனக்கு தெரியாதா என்று சொல்ல அவ எங்க மயக்கினான் நான் தானே கல்யாணமே பண்ண வச்சேன்னு சொல்லி மாதவி நினைக்கிறார்.
நந்தினி சிங்காரமும் ஆட்டோவில் வர இதுதான் ஐயாவோட வீடுன்னு உனக்கு தெரிஞ்சதில்ல அப்புறம் எதுக்கு இங்க வேலை செஞ்ச நீ வந்தா அன்னைக்கு போயிருந்தினவே இந்த பிரச்சனை இல்ல என்று சொல்ல, நான் ஒரு வாரம் சமாளிச்சுட்டு போயிடலாம் என்று தான் நினைச்சேன் என்று சொல்ல, அன்னைக்கு நான் காபி கொடுக்கும் போதும் நீ தானே இருந்த என்று கேட்கிறார். அதையும் மீறி கம்பெனி கார் உங்க கிட்ட இடத்தை மாத்தி விட சொல்லி கேட்டேன் ஆனா அவங்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. சரி விடுப்பா இந்த வேலை இல்லனா வேற பாத்துக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து விஜி போன் போட்டு வட்டிக்காரருக்கு பணம் கொடுக்க போகும் விஷயத்தை பற்றி கேட்க இப்பவே போயிடலாம் நான் அப்பாவை விட்டுட்டு அங்க வந்தது நீங்க அங்க போங்க என்று சொல்லி போனை வைக்கிறார். விஜி வட்டிக்காரர் வீட்டு வெளியில் காத்துக் கொண்டிருக்க நந்தினி வந்தவுடன் இருவரும் இவன் உள்ளே போக நந்தினிக்கு கால் தடுக்கிறது உடனே இங்கு வரும் போதெல்லாம் ஏதாவது ஒன்று நடக்குது என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் இல்ல வா நந்தினி என்று அழைத்துச் செல்கிறார்.
உள்ளே ஒருவரிடம் வட்டி பணத்தை வாங்கி விட்டு அவர் பொண்டாட்டியை அனுப்ப உன் பொண்டாட்டிய ஒரு சின்ன கீறல் கூட இல்லாம அனுப்பி வச்சிட்டேன் இந்த டெல்லிக்கு எப்பவுமே கை சுத்தம் வாய் சுத்தம் இருக்கணும் என்று சொல்ல நந்தினியும் விஜியும் இதை வாசலில் நின்று கவனித்துக் கொண்டிருக்கின்றன இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் இதுவரைக்கும் ரெண்டு வாட்டி அங்க போயிருக்கும் ஆனா ரெண்டு வாட்டியும் ஏதோ ஒன்னு தப்பா தோணுது சரியில்லாத இடத்துல வந்து மாட்டிட்டோமோன்னு தோணுது என்று நந்தினி விஜியிடம் சொன்ன அர்ச்சனா கவனிக்கிறார்.
மறுபக்கம் சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் அவளையும் அவ குடும்பத்தையும் எப்படி டீல் பண்ண வேண்டும் என்று எனக்கு தெரியும் நீங்க போங்க என்று சொல்லுகிறார். அனைவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க சூர்யா நந்தினிக்காக மதுரை மல்லியும் திருநெல்வேலி அல்வாவும் வாங்கிட்டு வந்ததாக சொல்லி கொடுக்க அனைவரும் கடுப்பாகின்றனர். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
