ராதிகா கொடுத்த ஷாக், பாக்கியா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!
ராதிகா அதிர்ச்சி கொடுக்க, பாக்யா வார்த்தை ஒன்றை சொல்லி உள்ளார்.
தமிழ் சின்ன திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகாவின் அம்மா சந்துருவிற்கு ஃபோன் போட்டு வர சொல்ல அவர் நான் வரல வக்கீல வேன அனுப்புறேன் என்னால வர முடியாது என்று சொல்லி விடுகிறார்.பிறகு ராதிகாவிடம் வா நாம மாப்பிள்ளையை போய் பாத்துட்டு வந்துடலாம் என்று சொல்ல நான் எதுக்கு வரணும் தப்பு பண்ணாரு அனுபவிக்கட்டும் என்று சொல்லுகிறார். இப்பத்திக்கு இத பேசிட்டு இருக்க முடியாது என்று சொல்ல இதே நீர் ரெஸ்டாரன்ட் வச்சு அவரோட ரெஸ்டாரண்ட்ல யாராவது இது மாதிரி பண்ணா சும்மா இருப்பாங்களா என்று கேட்டு கோபப்பட்டு பேசுகிறார். அவர் எப்படின்னா போகட்டும் நான் போலீஸ் ஸ்டேஷன் வாசலுக்கு போக மாட்டேன் என்று உறுதியாக சொல்லுகிறார்.
பிறகு எழில் பாக்யாவிடம் நடந்த விஷயங்களுக்கு மன்னிப்பு கேட்டு அழுகிறார். எனக்கு படம் பண்ணு விருப்பம் இல்லம்மா ஆனா என் மனசுல ஒரு ஓரத்துல இந்த படம் பண்ணி எனக்கு வாய்ப்பு கிடைச்சா இன்னும் நல்லா பாத்துப்பான்னு தோணுச்சு அதனாலதான் அப்படி பண்ணேன் என்று சொல்லி பாக்யாவிடம் என்று மன்னிப்பு கேட்க பசங்களோட சந்தோஷத்தை தவிர எனக்கு வேற என்ன இருக்கப் போகுது என்று சொல்லி அவரை சமாதானப்படுத்துகிறார். பிறகு எல்லாரும் உட்காருங்க காபி எடுத்துட்டு வரேன் என்று சொல்ல ஈஸ்வரி நில்லு பாக்கியானா இன்னும் பேசி முடிக்கல என்று நிறுத்திவிட்டு கோபி விஷயத்துல நீ செஞ்சது தப்பு என்று சொல்லுகிறார்.
பாக்யா உங்களுக்கு இன்னுமே புரியலையா அத்தை அந்த பிரியாணி சாப்பிட்டு யாராவது இறந்திருந்தால் நான் ஜெயிலுக்கு போய் இருக்கணும், ரெஸ்டாரண்ட்டா ஒடச்சிருப்பாங்க, என்ன அடிச்சிருப்பாங்க, ஆனா அதெல்லாம் உங்களுக்கு தப்பா தெரியலையா என்று கேட்க கோபி செஞ்சது தப்புதான் நான் இல்லைன்னு சொல்லல இருந்தாலும் நீ ஸ்டேஷனுக்கு போகும்போது என்கிட்ட கேட்டதுக்கு என்று சொல்ல என்னோட முடிவுல எந்த தப்பும் எனக்கு தெரியல என்று சொல்லி உறுதியாக சொல்லிவிடுகிறார். ஈஸ்வரி எதுவும் பேசாமல் உள்ளே சென்று விட செழியன் நீ பேசுவது எதுவுமே பிடிக்கலை என்று சொல்லிவிட்டு அவரும் சென்று விடுகிறார். உடனே இனியா உன்னை எனக்கு பிடிக்கவே இல்லைம்மா என்று அழுது கொண்டே சென்று விடுகிறார்.
மறுபக்கம் கோபியை போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வைத்து விசாரணை செய்ய என் மேல எந்த தப்பும் கிடையாது, என்று கோபி சொல்ல அப்போ உங்க முன்னாள் மனைவி கொடுத்த கம்பளைண்டுக்கு என்ன பதில் என்று கேட்கிறார் நான் அவ கூட வாழும் போது சந்தோஷமாவே இல்ல ஆனா இப்போ நான் இரண்டாவது கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியாக இருக்க, அது அவளுக்கு பிடிக்கல பொய் சொல்லி என்ன பிரச்சனைல சிக்க வைக்க பார்க்கிறது எல்லாம் சொல்ல, உடனே போலீஸ் அவரை கூப்பிடுங்க என்று சொல்லி ஆனந்தை கூப்பிடகின்றனர் இவர் தெரியுதா என்று கேட்க ஒரு ரெண்டு மூணு மாசம் போடும் முன்னாடி என்னோட ரெஸ்டாரன்ட்ல வேலை செஞ்சாரு அதுக்கு அப்புறம் எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லுகிறார்.
உடனே ஆனந்த் பாக்யா மேடத்துக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது , இவர் சொல்லி தான் கெட்டுப் போன இறைச்சியை கலந்த, இதனால என் குழந்தை உடம்புக்கு முடியாமல் போயிடுச்சு என்று சொல்ல, உன் குழந்தை ஒன்னு, மத்தவங்க குழந்தை என்றால் தப்பு பண்ணுவீங்களா என்று கோபப்பட மன்னிச்சிடுங்க சார் என்று ஆனந்த் சொல்லுகிறார். உடனே கோபி இவன் அந்த பாக்யா கூட சேர்ந்துகிட்டு பொய் சொல்றான் என்று சொல்ல சரி நான் உங்க மேல எஃப் ஐ ஆர் போடுற அதுக்கப்புறம் பேசிக்கோங்க என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வைக்கிறார்.
உடனே செந்தில் அவரை பார்க்க வர அதுக்குதான் நான் அப்பவே சொன்னேன் என்று சொல்லுகிறார். இதுக்கு தான் இவ்வளவு தூரம் வந்தியா சொல்ல தான் வந்தியா என்று செந்தில் மீது கோபப்பட அதெல்லாம் ஒன்னும் இல்லடா நான் வக்கீல் அரேஞ்ச் பண்ணி இருக்கேன் நான் இருக்கக் கூடாது என்று சொல்லிவிடுகிறார்.
பாக்யாவிடம் ஏழில் படம் பண்ணப்போவதில்லை என்ற விஷயத்தை சொல்ல பாக்கியா என்ன சொல்லப் போகிறார் ?எழிலின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.