Atlee's New Movie Two Leading Celebrities in Lead Role Update
Atlee's New Movie Two Leading Celebrities in Lead Role Update

அட்லியின் புதிய படத்தில் இரண்டு முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து “ராஜா ராணி”திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அட்லி.பின்னர் தளபதி விஜயை வைத்து “தெறி” என்ற படத்தை இயக்கினார். இதன் மூலம் பிரபலமான இயக்குனராக மாறிய அட்லி, மெர்சல் ,பிகில் போன்ற வெற்றி படங்களை இயக்கினார்.

ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. எனவே இதனைத் தொடர்ந்து புதிய படம் ஒன்று இயக்க உள்ளார்.

அந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் உச்ச நட்சத்திரங்களான கமல்ஹாசன் மற்றும் சல்மான் கான் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.