அட்லீ-அல்லு அர்ஜுன் இணையும் படத்தில், 5 ஹீரோயின்கள்..

அட்லீ-அல்லு இணையும் படத்தின் தகவல்கள் காண்போம்..
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளார். இப்படத்தில் 5 நாயகிகள் நடிக்கிறார்கள். இதில் 3 பேர் பாலிவுட் நடிகைகள். ஒருவர் வெளிநாட்டு நடிகை. இப்படம் தற்போது AA22xA6 என அழைக்கப்படுகிறது. இது ஒரு சயின்ஸ் பிக்சன் படமாகும்.
ஷாருக்கானின் ஜவான் படத்தை தொடர்ந்து, அட்லீ, அல்லு அர்ஜுனுடன் இணைந்துள்ளார். படத்தில் அல்லு 3 வேடங்களில் வருகிறார். அவை ஹீரோ, வில்லன், அனிமேஷன் வேடம். இபடத்திற்காக அட்லீ சர்வதேச விஎஃப்எக்ஸ் நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.
தனது உடற்தகுதி, ஸ்டைலிங் மற்றும் தோற்றத்தில் அல்லு தற்போது கவனம் செலுத்தி வருகிறார். படத்தில் தீபிகா படுகோனே, ஜான்வி கபூர், மிருணாள் தாக்கூர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதுதவிர ‘கிங்டம்’ பட நடிகை பாக்யஸ்ரீ போர்ஸும் நடிக்க வாய்ப்புள்ளது. மேலும் ஒரு ஹாலிவுட் நடிகையும் கமிட் ஆகவுள்ளார் என கூறப்படுகிறது.
ரூ.700 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகும் இப்படம், டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டது. இதன், படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்கி, அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
