தல அஜித் வலிமை ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்தில் சிக்கிய நிலையில் படலாசியர் இது குறித்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Arun Bharathi Tweet About Ajith : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை, எச் வினோத் இயக்கி வரும் இந்த படத்தின் ரிஸ்க்கான காட்சியில் நடித்த போது ஏற்பட்ட விபத்தில் அஜித்திற்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ரசிகர்கள் அஜித் விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனை பிராத்தித்து வருகின்றனர். இந்நிலையில் பாடலாசிரியர் அருண் பாரதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அதில் உயிரும் உனக்கு நகம்போல
வெட்ட வெட்ட முளைத்திடுவாய்
காயம் எத்தனை வந்தாலும்
ரசிகனுக்காக பிறப்பெடுப்பாய்!
என கூறியுள்ளார்.