கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியை தொடர்ந்து மேலும் ஒரு மாஸ்டர் பட நடிகர் இணைந்துள்ளார்.

Arjun Doss in Vikram Movie : தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தை தொடர்ந்து இவர் கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கினார். அதன் பின்னர் தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தினை இயக்கினார்.

விக்ரம் படத்தில் மீண்டும் இணையும் மாஸ்டர்.. விஜய்சேதுபதியை தொடர்ந்து படத்தில் இணைந்த முன்னணி நடிகர் - யார் அவர் தெரியுமா?

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். லோகேஷ் கனகராஜ் அடுத்தபடியாக கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்க உள்ளார்.

இந்தத் திரைப்படத்தில் ஏற்கனவே மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. மேலும் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து மாஸ்டர் படத்தில் நடித்த அர்ஜுன் தாஸ் அவர்களும் இத்திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.

விக்ரம் படத்தில் மீண்டும் இணையும் மாஸ்டர்.. விஜய்சேதுபதியை தொடர்ந்து படத்தில் இணைந்த முன்னணி நடிகர் - யார் அவர் தெரியுமா?