அநீதி படம் எப்படி இருக்கு என்பது குறித்த விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவரது இயக்கத்தில் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் அநீதி. இந்த படத்தில் திருமேனி என்ற கதாபாத்திரத்தில் அர்ஜூன் தாஸ் நடிக்க சுப்புலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் நடித்துள்ளார்.

மேலும் வனிதா விஜயகுமார், காளி வெங்கட், அர்ஜூன் சிதம்பரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

படத்தின் கதைக்களம் :

பிரபல உணவு டெலிவரி நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்யும் அர்ஜூன் தாஸ்க்கு யாரை பார்த்தாலும் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் வகையில் ஒரு விசித்திரமான நோயால் தவித்து வருகிறார்.

இப்படியான நிலையில் இவர் நாயகி துஷாரா விஜயனை சந்திக்க இந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்குகிறது. அர்ஜூன் தாஸ்க்கு துஷாரா மீது காதல் மலர்கிறது.

துஷாரா விஜயன் ஒரு வயதான பாட்டியை பார்த்து கொள்ளும் வேலை செய்து வருகிறார். அந்த பாட்டியின் மகள், மகன் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் பாட்டி இறந்து போக அதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் இந்த படத்தின் கதை.

படத்தை பற்றிய அலசல் ‌:

அர்ஜுன் தாஸ் வழக்கம் போல எதார்த்தமான நடிப்பை கொடுக்க துஷாரா விஜயன் தனது வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.

ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு பலம் சேர்க்க மற்ற நடிகர்கள் அவர்களது பங்கை செவ்வணே செய்துள்ளனர்.

இயக்குனர் வசந்தபாலன் மற்ற படங்களை போல சினிமாடிக்கலாக கொண்டு செல்லாமல் சாமானிய மக்கள் ரசிக்கும் வகையில் எதார்த்தமாக கொண்டு சென்றுள்ளார்.

மொத்தத்தில் அநீதி நீதியே உணர்த்தும் படம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.