ராதிகாவின் கர்ப்பத்தை கன்ஃபார்ம் செய்துள்ளார் டாக்டர். 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகாவும் கோபியும்  மெடிக்கல் ஷாப்பை தேடி அலைய எல்லா மெடிக்கல் ஷாப் மூடி இருக்க ராதிகா பக்கத்துல ஹாஸ்பிடல் ஒன்னு இருக்குல்ல அங்க போங்க அங்க மெடிக்கல் ஷாப் இருக்கும் என்று சொல்லி கூட்டி செல்கிறார். 

பிறகு கோபி வெளியே போய் நிற்க வைத்து விட்டு உள்ளே சென்ற ராதிகா பிரக்னன்சி கிட் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து பாத்ரூமுக்கு சென்று பரிசோதனை செய்ய கர்ப்பம் என தெரிய வருகிறது. 

வெளியே வந்த ராதிகா கோபியுடன் நான் கர்ப்பமா இருக்கேன் என்று சொல்ல கோபி சந்தோஷப்பட்டு ராதிகாவை தூக்க போக ராதிகா கோபப்பட கோபி ஓ கர்ப்பமா இருக்கும் போது பொண்டாட்டி எடுத்துக்க கூடாதா என்று சொல்கிறார். ராதிகா கொஞ்சம் யோசிச்சு பாருங்க நான் கர்ப்பமாய் இருக்கேன் என்று திரும்ப சொல்ல கோபி அதிர்ச்சியடைகிறார். 

ராதிகா வீட்ல இந்த விஷயத்தை எப்படி சொல்றது யார்கிட்ட சொல்றது? எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம் என்று கோபியை திட்ட நான் என்ன பண்ண நான் என் அம்மாவோட படுத்துட்டு இருந்தேன் நீ தான் மேல ரூம் ரெடி பண்ணி கூட்டிட்டு வந்த உன் தப்புதான் என்று ராதிகாவை குற்றம் சொல்கிறார். 

பிறகு என்ன பண்றதுன்னு யோசிக்கலாம் என்று முடிவெடுத்து இருவரும் ஹாஸ்பிடல் கிளம்பி செல்கின்றனர். கீழே யாராச்சு கேட்டா என்ன சொல்லுவீங்க இன்று ராதிகா கேட்க நீயே சொல்லு பேபி என்று கோபி கேட்க இந்த மாதிரி வாந்தி வாந்தி வருது ப்ரெக்னன்சி கிட்டு வாங்கிட்டு வந்து செக் பண்ணி பார்த்தோம் ரெண்டு கோடு வந்து இருக்குன்னு சொல்லுங்க என்று சொன்னதும் கோபி அப்படியே சொல்றேன் என்று சொல்ல ராதிகா அப்படியே மேலிருந்து கீழே தள்ளி விட்டுடுவேன் என்று திட்டுகிறார். 

பிறகு இருவரும் ஹாஸ்பிடல் கிளம்ப கோபி ராதிகாவுக்கு இன்னும் சரியாகல வாந்தி வாந்தி வருது என்று சொல்ல ராமமூர்த்தியும் ஈஸ்வரியும் அதுக்கு எதுக்கு ஆஸ்பத்திரி போகணும் என்று வீட்டு வைத்தியத்தை சொல்ல கோபி அதெல்லாம் சரி வராது நாங்க போய் ஹாஸ்பிடல் பார்த்துட்டு வந்துறோம், அதுவரைக்கும் நீங்க ரெஸ்டாரன்ட் பாத்துக்கங்க என்று ஈஸ்வரியை சொல்ல ஈஸ்வரி இந்த வெயில்ல என்னால பாக்க முடியாது என்று கூறுகிறார். 

கோபி ப்ளீஸ்மா இன்னைக்கு ஒரு நாள் மட்டும் என்று கெஞ்சி செழியனை கூட்டிட்டு போய் விட சொல்லி விட்டு ஹாஸ்பிடல் கிளம்பி வருகிறார். ஈஸ்வரி ராதிகா இதுக்கெல்லாம் கூடவா ஹாஸ்பிடல் போவ என்று புலம்பி விட்டு மெஸ்ஸுக்கு கிளம்புகிறார். 

ஹாஸ்பிடல் வந்த ராதிகாவை செக் பண்ண டாக்டர் ரெண்டு மூணு வாரம் கழிச்சு ஸ்கேன் பண்ணிக்கலாம் இப்போதைக்கு சில மாத்திரை எழுதி கொடுக்கிறேன் என்று சொல்ல கோபி ராதிகா கர்ப்பமா இல்லையா என்று கேட்க டாக்டர் சொல்ல மறந்துட்டானா கங்கிராஜுலேஷன் அவங்க கன்சீவா இருக்காங்க என்று சொன்னதும் கோபி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.