ரோகினியால் மீனாவின் கடை மொத்தமாக பறி போயுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா டென்ஷனில் பார்வதிக்கு போன் பண்ணி ஐடியா கேட்க முடிவு எடுக்கிறார்.
பிறகு பார்வதிக்கு போன் பண்ண இவகிட்ட ஐடியா கேட்டா இங்க நடந்த எல்லா விஷயத்தையும் சொல்ல வேண்டியது இருக்கும் வேண்டாம் என போனை கட் பண்ண போகும் சமயத்தில் பார்வதி ஃபோனை எடுத்துப் பேச விஜய்யா எதை எதையோ பேசி மழுப்பி போனை வைக்க பார்வதி அங்கு நடந்தது என்னன்னு தெரியாம எனக்கு வேற தூக்கம் வராது என்று ரோகினிக்கு போன் போட ரோகிணி நடந்தவை அனைத்தையும் உளருகிறார்.
அதைத்தொடர்ந்து ரோகினி எனக்கு தெரிஞ்சி கார்ப்பரேஷன்ல பர்மிஷன் கூட வாங்கி இருக்க மாட்டாங்க ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்தா போதும் அவங்களே வந்து தூக்கிட்டு போயிடுவாங்க நம்ம மேலயும் சந்தேகம் வராது என்று சொல்ல விஜயா சூப்பர் ஐடியா என்று கம்ப்ளைன்ட் கொடுக்க சொல்ல ரோகிணியும் கம்ப்ளைன்ட் கொடுத்து விடுகிறார்.
மறுநாள் காலையில் விடிந்ததும் கார்ப்பரேஷன் ஆபீஸில் இருந்து ஆட்கள் வந்து கடையை தூக்க மாடியில் இருந்து விஜயாவும் ரோகிணியும் இதை பார்த்து சந்தோஷப்படுகின்றனர். அதைத்தொடர்ந்து மீனா ஆட்டோவில் இருந்து இறங்கி வந்து ஏன் சார் கடையை எடுக்குறீங்க என்று அழுது புலம்ப அண்ணாமலையும் வந்துவிட பர்மிஷன் இல்லாம கடை வச்சிருக்கீங்க அதுவும் இல்லாம இந்த கடையால தொந்தரவா இருக்குன்னு கம்பிளைன்ட் வந்து இருக்கு அதனால நாங்க ஆக்சன் எடுத்து தான் ஆகணும் என்று கடையை அள்ளிப்போட்டு செல்கின்றனர். இதை ரோகிணியும் விஜயாவும் பார்த்து ரசிக்கின்றனர்.
அதை பிறகு முத்து வீட்டுக்கு வர கடை இல்லாததை பார்த்து எங்க மீனா கடையை காணும் என்னாச்சு என்று கேட்க மீனா நடந்ததை சொல்லி அழுது துடிக்கிறார். மேலே விஜயா ஹாயாக உட்கார்ந்து சந்தோஷத்தில் இருக்க உள்ளே வந்த முத்து சத்தம் போட ரோகினியும் விஜயாவும் எல்லாத்தையும் முறையா அனுமதி ஓட செஞ்சிருக்கணும், அதுக்கெல்லாம் படிப்பறிவு வேணும் என்று நக்கலாக பேசுகிறார்.
கடையெடுக்க சொன்னது எதிர் வீட்டுக்காரனா தான் இருப்பான் என்று முத்து சண்டைக்கு போக அண்ணாமலை தடுத்து நிறுத்துகிறார். முத்து விடும் என கட்டி வண்டி எடுத்துக்கலாம் என்று சொல்ல அண்ணாமலை அப்படி எடுத்தா கூட வைக்க விடுவாங்களான்னு தெரியல கம்ப்ளைன்ட் வந்து இருக்குன்னு தானே சொன்னாங்க என்று சொல்ல மீனா எனக்குன்னு ஒரு அடையாளமா நீங்க அந்த கடையை வைத்து கொடுத்தீர்கள், நானும் ஒரு வேலை இருக்குன்னு சந்தோஷமா இருந்தேன் ஆனா எனக்கு அதெல்லாம் தகுதி இல்லன்னு இப்ப புரிஞ்சிடுச்சு. நான் எப்பவும் வீட்ல தான் இருக்கணும் அப்படியே இருந்துக்கிறேன் விடுங்க அதான் என் தலையெழுத்து என்று மீன் அழுது கொண்டே சென்று விடுகிறார்.
இதையடுத்து விஜயா மற்றும் ரோகினியை பார்த்து நிறுத்து யாரோ வீடு கொளுத்தி தான் இந்த வேலையை பார்த்து இருக்காங்க என்று சொல்ல இருவரும் பதறுகின்றனர். விஜயா என்னை ஏன்டா பார்க்கிற என்னமோ நான் எதோ பண்ண மாதிரி சொல்ற என்று சமாளிக்கிறார்.
அதைத்தொடர்ந்து ரோகினியும் விஜயம் ரூமுக்குள் சென்று கைதட்டி சிரித்து சந்தோஷப்படுகின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.