மனோஜ் கைக்கு பணம் திரும்ப கிடைக்க முத்து செக்மேட் வைத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் வரும் நாட்களில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஜீவா இந்த பிரச்சனை இருந்து தப்பிக்க என்ன வழி என்று கேட்க லாயர் சமாதானமா போறதுக்கு தான் ஒரே வழி என்று சொல்ல 15 லட்சம் ரூபாயை மனோஜ்க்கு திருப்பி கொடுக்கிறார் ஜீவா.
மனோஜ்க்கு சாட்சியாக ரோகிணி கையெழுத்து போட ஜீவாவுக்கு சாட்சியாக கையெழுத்து போட யாரும் இல்லாத நிலையில் வெளியே வர அவர் வெளியே மீனாவின் வண்டி எடுக்க காத்திருக்கும் முத்துவை பார்க்க முத்துவிடம் ஒரு சாட்சி கையெழுத்து கேட்கிறார்.
வீட்டுக்கு வந்த மனோஜ் என்ன பண்றதுன்னு தெரியாம இருந்தேன் ஆனா இப்போ எனக்கு 15 லட்சம் ரூபாய் பணம் வந்திருக்கு என்று சொல்ல முத்து உங்க மாமனார் பணத்தை அனுப்புறதா இருந்தா உன் பொண்டாட்டிக்கு தான் நான் அனுப்பனும் உனக்கு எதுக்கு அனுப்பனும் என்று கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார்.