என் கர்ப்பத்தை கலைக்க சொல்ல நீங்க யாரு என அதிர்ச்சி கொடுத்துள்ளார் ராதிகா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இந்த குழந்தை உங்களுக்கு வேண்டாம் என்று ஈஸ்வரி சொல்ல ராதிகா அதிர்ச்சி அடைகிறார். கோபிக்கு வளர்ந்த பசங்க இருக்காங்க உனக்கும் ஒரு பொண்ணு இருக்கா, இந்த நேரத்துல நீ கர்ப்பமா இருக்கேன்னு தெரிஞ்சா வீட்ல எல்லாரும் என்ன நினைப்பாங்க அதெல்லாம் சரிப்பட்டு வராது என்று சொல்கிறார்.

ராதிகா ஏன் சரிப்பட்டு வராது என்று கேட்க நீங்க இந்த வீட்ல தான் இருக்கீங்க, ஜெனி அமிர்தா இரண்டு பேரும் இந்த வீட்டுல தான் இருக்காங்க, நாளைக்கு இனியாவுக்கு மாப்பிள்ளை வீட்ல இருந்து வந்தா உன்ன பாத்து என்ன நினைப்பாங்க இத பத்தி எல்லாம் யோசிக்க மாட்டீங்களா என்று கேட்க இதையெல்லாம் நான் எதுக்கு யோசிக்கணும்?என அதிர்ச்சி கொடுக்கிறார்.

இந்த குழந்தையை பெத்துக்கணுமா வேண்டாமான்னு முடிவு பண்ண வேண்டியது நான் தான் என்று ராதிகா சொல்கிறார். நீங்க புரியாம பேசுறீங்க, இந்த வீட்ல பெரியவங்கன்னு நாங்க இருக்கோம். நாங்களும் முடிவு பண்ணலாம் என்று ஈஸ்வரி சொல்ல ராதிகா இந்த குழந்தையை நான் பெத்துக்கத்தான் போறேன் என்று உறுதியாக சொல்கிறார். நான் சொல்றத கொஞ்சம் கேளு என்று ஈஸ்வரி திரும்ப திரும்ப சொல்ல அன்னைக்கு அமிர்தா கிட்ட என்ன சொன்னீங்க? எழிலுக்கும் உனக்கும் ஒரு பிடிப்பு வேண்டும். அதுக்காக குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னீங்க, அதே மாதிரி எங்களுக்கு பிடிப்பு வேண்டாமா என கேள்வி கேட்கிறார்.

ஈஸ்வரி கோபி இது என்னடா பேசிக்கிட்டு இருக்கா என்று கேட்க ராதிகா உங்க அம்மா என்ன பேசுறாங்க என்று கேட்க எதுவும் பேச முடியாமல் இருக்கிறார். நான் இந்த குழந்தையை பெத்துக்கத்தான் போறேன் உங்களுக்கு நாங்க இந்த வீட்ல இருக்கிறது பிரச்சினையா இருந்தா நாங்க வெளியே போயிடுறோம் என்று சொல்கிறார். நான் எதுக்கு கோபியோட பிள்ளைகளை பத்தி யோசிக்கணும்? திரும்பத் திரும்ப இத பத்தி பேசாதீங்க அப்புறம் நான் எதையாவது சொல்லிடுவேன் பேசாம கிளம்பி போங்க என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.

இதனால் ஈஸ்வரி உடைந்து போய் வெளியே வர கோபி ராதிகா முறைப்பதை பார்த்து பின்னாடியே ஓடிவர ஈஸ்வரி கோபியிடம் போய் உன் பொண்டாட்டி நீ தானே பிடிச்சிக்கிட்டு சுத்து என சொல்லிவிட்டு கீழே வருகிறார். ஈஸ்வரி உடைந்து போய் உட்கார பாக்யா தண்ணீர் கொடுத்து அவரிடம் பேச ராதிகா விஷயத்தை சொல்ல முடியாமல் தவிக்க பாக்கியா ராதிகா கர்ப்பம் என்பது எனக்கு தெரியும் என சொல்லி அதிர வைக்கிறார்.

எப்படி நீ இதையெல்லாம் பார்த்துகிட்டு இருக்க?இது நல்லாவா இருக்கு என்று கேட்க மத்தவங்க வாழ்க்கையில கருத்து சொல்ற இடத்தில நான் இல்ல என்று பாக்கியா சொல்கிறார். நீங்க இத பத்தி எல்லாம் யோசிக்காதீங்க உங்க உடம்பு ரொம்ப முக்கியம் என்று சொல்லிவிட்டு எழுந்து வருகிறார். பாக்யா, ஈஸ்வரி பேசிய விசயத்தை கேட்டு செல்வியும் அதிர்ச்சியடைகிறார்.

பிறகு கோபி ரூமுக்கு செல்ல ராதிகா எனக்கு இந்த குழந்தை வேண்டும் யார் என்ன சொன்னாலும் நான் இந்த குழந்தையை பெற்று வளர்க்கத் தான் போறேன், எனக்கு என்ன வயசு ஆயிடுச்சு ஏன்னா குழந்தை பெத்துக்க கூடாது நாளைக்கு நீங்க எல்லாரும் கூப்பிட்டு நான் கர்ப்பமா இருக்க விஷயத்தை சொல்றீங்க. இதை வீட்ல இருக்கிறோம் இல்ல அது அடுத்த விஷயம் ஆனால் கர்ப்பமாய் இருக்கும் விஷயம் எல்லாருக்கும் தெரியணும் என்று கோபியை பிடித்து தள்ளி கோபப்படுகிறார். கோபி நாளைக்கு சொல்லிடுறேன் என்று வாக்கு கொடுக்கிறார்.

அடுத்ததாக பாக்கியா மொட்டை மாடியில் துணி மடித்து கொண்டிருக்கிற செல்வி உண்மையாகவே ராதிகா கர்ப்பமாக இருக்கா என்று கேட்கிறார். எப்படிக்கா இது எல்லாம் தாங்கிக்கிட்டு இருக்க என்று கேள்வி கேட்க என் வாழ்க்கைல அவர் யாரோ ஆகிவிட்டார் அப்படி இருக்கும்போது நான் எதுக்கு கவலைப்படணும் என்று பாக்கியா சொல்ல செல்வி என்னதான் இருந்தாலும் நீ ஒரு பொண்ணு தானே 25 வருஷம் அவரோட வாழ்ந்திருக்க அப்படி இருக்கும்போது அவர் இப்போ இதே வீட்ல வேற ஒரு பொண்ணோட வாழறது இல்லாம ஒரு குழந்தையை கெடுத்துக்க போறது பார்த்தா உனக்கு கோபம் வரலையா என்று கேட்கிறார்.

நானா இருந்திருந்தால் என் புருஷனுக்கு விசத்தை வெச்சி இருப்பேன் என்று சொல்ல பாக்கியா எப்போ ஹாஸ்பிடலில் வச்சி அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா பார்த்தேனோ அப்பவே எல்லாம் முடிஞ்சு போச்சு. இப்ப என் வாழ்க்கையில அவர் யாரோன்னு ஆகிட்டாரு என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.