ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் கார்த்திகை தீபம் அபிராமி.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இத சீரியலில் அபிராமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை மீரா கிருஷ்ணன்.
ஜீ தமிழ் மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கோதை என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். தமிழின் சரஸ்வதியின் ஹீரோவை விட வயது குறைவான மீரா கிருஷ்ணன் அம்மாவாக நடித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோக்கள் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. இவங்களையா ஆமாவா நடிக்க வைக்கிறாங்க என ரசிகர்கள் ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.