கில்லி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

Unknown Secrets of Ghilli Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தரணி இயக்கத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் கில்லி. திரிஷா நாயகியாக நடிக்க பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 

தற்போது இந்த படம் மீண்டும் ரி ரிலீஸ் ஆகிய உள்ள நிலையில் முதன் முதலில் இந்த படத்தில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது தரணி முதலில் இந்தப் படத்தின் கதையை விக்ரம் மற்றும் ஜோதிகாவிடம் தான் சொன்னதாக தெரியவந்துள்ளது. 

ஆனால் அப்போது இருவருமே வேறு படங்களில் பிசியாக இருந்த காரணத்தினால் அவர்களால் நடிக்க முடியாமல் போய் உள்ளது..  அதன் பின்னரே இந்த படத்தில் விஜய், திரிஷா நடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.