Pushpa 2

இதுக்கு எதுக்கு 40 நிமிஷம் பேசினாங்க.. அருணுக்கு ஆதரவாக பேசிய அர்ச்சனா.!

அருணுக்கு ஆதரவாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார் அர்ச்சனா.

archana support to bigg boss tami 8 arun
archana support to bigg boss tami 8 arun

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

சமீபத்தில் அருண் மற்றும் தீபக் இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்து வார இறுதி நாட்கள் விஜய் சேதுபதி கேட்டிருந்தார்.

அது குறித்து அர்ச்சனா தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் தீபக் பேசியதை எல்லாம் விட்டுவிட்டு அருண் பேசியதை மட்டும் ஊதி பெரிதாக்கி விட்டார்கள் விஜய் சேதுபதியும் சேர்த்து அர்ச்சனா குற்றம் சாட்டியுள்ளார்.

ஷோ முடிந்த பிறகு மைக்கில் பேசியதும் கன்சக்சன் ரூமில் பேசியதும் எல்லாம் டேமேஜ் கண்ட்ரோல் மாதிரி இருந்தது. இதை 40 நிமிஷம் ஏன் பேசிகிட்டு இருக்கீங்க என்று விஜய் சேதுபதியை குறித்து பேசி உள்ளார்.

இதில் யார் மீது தவறு உள்ளது ?யார் செய்தது தவறு என்பதை நீங்கள் எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.