அனுஷ்கா நடித்த ஆக்ஷன் ஜானர் படம்; ரிலீஸ் தேதி அறிவிப்பு..

நடிகைகளை பொறுத்தவரையில் 35 வயதை கடந்துவிட்டால், பெரும்பாலும் ஹீரோயின் வாய்ப்புகள் குறைவது இயல்பு என்பது தெரிந்ததே.
அவ்வகையில், சமந்தா தனக்கேற்ற முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் வந்தால் நடிக்கிறார். வெப் சீரிஸிலும் ஆக்ஷனாக மிரட்டி வசீகரிக்கிறார். அதுபோல, அனுஷ்கா ஷெட்டியும் தற்போது மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அவர் கடைசியாக நடித்த ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி’ படம் வெளியாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. தற்போதுதான் ‘காட்டி’ படம் மூலம் கம்பேக் கொடுக்கவுள்ளார்.
இப்படத்தில், அனுஷ்காவை முற்றிலும் புதிய தோற்றத்தில் காணலாம். ஏற்கனவே, வெளியான க்ளிம்ப்ஸில், அவர் எதிரிகளை அழிப்பது போல் காட்டப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களை ஈர்த்தது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. க்ளிம்ப்ஸே இவ்வளவு அழுத்தமாக இருந்தால், படம் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் எழுந்துள்ளது. இந்நிலையில், படக்குழு ஜூலை 11-ந்தேதி படம் வெளியாகும் என தெரிவித்துள்ளது.
கிருஷ் ஜாகர்லமுடி இயக்கியுள்ள இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் வழங்க, ஃபர்ஸ்ட் ஃப்ரேம் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் ராஜீவ் ரெட்டி மற்றும் சாய்பாபு ஜாகர்லமுடி இணைந்து தயாரித்துள்ளனர்.
பட வெளியீட்டு தேதியை அறிவித்து, படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில், அனுஷ்கா மற்றும் விக்ரம் பிரபு நதியைக் கடந்து செல்வது போன்ற புகைப்படம், இடம்பெற்றுள்ளது.
