ஜனநாயகன் : கடைசி நாள் ஷூட்டிங், விஜய் செய்த விஷயம்..!

ஜனநாயகன் படத்தின் விஜய் கடைசி நாள் ஷூட்டிங் போது செய்த விஷயம் வெளியாகி உள்ளது.

JanaNayagan The last day of shooting, what Vijay did..!
JanaNayagan The last day of shooting, what Vijay did..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது.

மேலும் பூஜா ஹெக்டே,மமீதா பைஜூ,பிரியாமணி, பாபி தியோல்,மோனிஷா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வருகிற ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி பொங்கல் முன்னிட்டு இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரிக்க செய்துள்ளது. இந்த படத்துக்கு பிறகு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் விஜய் நடிக்க வேண்டிய காட்சி பகுதிகளின் படப்பிடிப்பு பணிகள் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. பட குழு பார்ட்டி கொடுத்து அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும் ஆனால் விஜய் அதனை தன்மையுடன் மறுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.ஆனால் விஜய் சில நாட்களாகவே படப்பிடிப்பில் எமோஷனலாக இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

JanaNayagan The last day of shooting, what Vijay did..!
JanaNayagan The last day of shooting, what Vijay did..!