அனிதா சம்பத்துக்கு அடுத்தடுத்து ஜாக்பாட் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

Anitha Sampath With Popular Actors : தமிழ் சின்னத்திரையில் சன் நெட்வொர்க் சேனல் செய்தி வாசிப்பாளராக வலம் வந்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் அனிதா சம்பத். அவருடைய அழகிய தமிழ் எக்கச்சக்கமாக ரசிகர்கள் உருவாகினர். மேலும் அவருக்கு படங்களில் சிறிய சிறிய ரோல்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து வந்தன. பின்னர் வெப் சீரிஸ் தொடர் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு எப்போ பார்த்தாலும் அழுது கொண்டே இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருடைய பெயர் டேமேஜ் ஆனாலும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி மூலம் மீண்டும் பாப்புலர் ஆனார்.

அனிதா சம்பத்துக்கு அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்.. யார் கூடவெல்லாம் சேர்ந்து நடிக்கிறார் பாருங்க - லைக்குகளை குவிக்கும் புகைப்படங்கள்
இன்று, ஜூடோ கலையின் தந்தை பிறந்த தினம் : கூகுள், டூடுலில் பதிந்து மரியாதை

இதனையடுத்து இவருக்கு வெள்ளித்திரையில் தொடர்ந்து வாய்ப்புகள் அமைந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது நடிகை மீனா மற்றும் சத்யராஜுடன் இணைந்து படம் ஒன்றில் நடிக்கிறார். இருவருடனும் அனிதா சம்பத் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது.

அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வரும் அனிதா சம்பத்துக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

காஞ்சனா மாதிரி இருக்கு – IPC 376 Public Review | Nandita Swetha | Yaadhav Ramalinkgam | HD