Vijay and Ajith
அஜித்துக்கும் உங்களுக்குக்கும் ஆகவே ஆகாதா? சார் என கேட்ட தொகுப்பாளருக்கு விஜய் கூலாக பதில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்கள் இருவருக்கும் தொழில் ரீதியாக போட்டிகள் இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர்.

ஆனால் இவர்களின் ரசிகர்கள் ஒருபோதும் அப்படி இருப்பதில்லை. சமூக வளையதளங்களில் எந்நேரமும் சண்டையும் சச்சரவுமாக தான் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சன் டிவி தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜய், அசினை பேட்டி எடுத்த போது விஜயிடம் உங்களுக்கும் அஜித்திற்கும் ஆகவே ஆகாதா? என கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த விஜய் அப்படியெல்லாம் ஒன்று இல்லை. எங்களுக்கு இடையே எந்த பிரச்னையும் இல்லை என கூலாக பதிலளித்தாக கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.