
கதையே இல்லாமல் உருட்டி உருட்டி சாதனை படைத்துள்ளது சன் டிவி சீரியல் ஒன்று.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. சீரியல் கதைக்களம் எப்படி இருந்தாலும் சன் டிவி என்றாலே அதை பார்ப்பதற்கு ஒரு தனி கூட்டமே இருந்து வருகிறது.

அப்படி ஒரு கூட்டத்தால் இன்று கதையே இல்லாமல் உருட்டி உருட்டி ஒளிபரப்பாக்கி கொண்டே இருக்கும் சீரியல் தான் அன்பே வா. இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு பெற்றாலும் தற்போது பெரிய அளவில் கதை இல்லாமல் கண்டமேனிக்கு நகர்ந்து வருகிறது.

ரசிகர்கள் பலரும் இந்த சீரியல் எப்போது முடியும் என கேள்வி எழுப்பி வரும் நிலையில் இந்த மாதத்துடன் மூன்று வருடத்தை நிறைவு செய்ய உள்ளது அன்பே வா சீரியல். 900 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ள நிலையில் அதனை சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.