கணவர் குறித்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார் மனைவி சங்கீதா.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வருபவர் ரெடின் கிங்ஸ்லி. இவர் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மனைவி சங்கீதாவிற்கு ரெடின் கிங்ஸ்லி கோலாகலமாக வளைகாப்பும் நடத்தி இருந்தார் சமீபத்தில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கணவர் குறித்து சுவாரசிய தகவல்களை மனைவி சங்கீதா பகிர்ந்துள்ளார் அதாவது நாங்கள் திருமணம் செய்து கொண்ட பின் என்னிடம் கேட்காமல் அவர் எந்த முடிவையும் எடுக்க மாட்டார் டிஸ்கஸ் செய்யாமல் எதையும் செய்ததில்லை நாங்கள் ரெண்டு பேரும் சேர்ந்து தான் அனைத்தையும் செய்வோம் என்று பேசி உள்ளார்.
இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.