ரீ ரிலீஸ் செய்யப் போகும் விஜய்யின் ஹிட் திரைப்படம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

விஜயின் ஹிட் படம் ஒன்று விரைவில் ரீ ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Vijay’s hit movie to be re-released

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. இது விஜய்யும் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் விஜய் நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் குஷி எஸ் ஜே சூர்யா இயக்கிய இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலே இந்த படத்தை பெரிதும் கொண்டாடி வருகின்றனர் இந்த நிலையில் தற்போது இந்த படத்தை மீண்டும் செப்டம்பர் 25ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Vijay’s hit movie to be re-released
hit moviere-releasedvijayVijay's hit movie to be re-releasedஎஸ்.ஜே. சூர்யாகுஷிரீ ரிலீஸ்விஜய்ஜனநாயகன்