தயாரிப்பாளர் இல்ல திருமண விழாவில் விஜய், திரிஷா ஒன்றாக பங்கேற்பு..

ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பாளர்களில் ஒருவரான கல்பாத்தி சுரேஷின் இல்ல திருமண நிகழ்வில் தவெக தலைவரும், நடிகருமான விஜய்யும், திரிஷாவும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் பெயர்களில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ் மற்றும் கல்பாத்தி சுரேஷ் ஆகியோரது பெயர் இடம்பெறும். இதில் கல்பாத்தி சுரேஷின் மகன் திருமண விழா சென்னையில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் விஜய்யும் திரிஷாவும் ஒன்றாக கலந்து கொண்டனர்.

சமீபத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். அது குறித்து வலைத்தளத்தில் கருத்துகளும் விவாதங்களும் நிகழ்ந்தன.

இந்தச் சூழலில் விஜய், திரிஷா இருவரும் பொது நிகழ்வு ஒன்றில் சேர்ந்து கலந்துகொண்டது கவனம் ஈர்த்துள்ளது. விஜய், திரிஷா இருவரும் ஒன்றாக மேடையில் அருகருகே நின்று மணமக்களை வாழ்த்திய வீடியோ பதிவை பி.ஆர்.ஓ நிகில் முருகன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை முன்வைத்தும் வலைதளங்களில் பேச்சுகளும் கருத்துகளும் பெருகி வருகின்றன.

vijay and trisha attends ags family wedding event
actress trishavijayWeddingதிரிஷாவிஜய்