விரைவில், இயக்குனர் விக்னேஷ் சிவன் ‘தல’ அஜித்திடம் கதை சொல்லுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படின்னா.. விஷயம் இப்டி.!
அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் பற்றி விக்னேஷ் சிவன் போட்ட இன்ஸ்டா ஸ்டோரி, படத்துக்கு எதிரான கருத்தை கொண்டுள்ளதாக ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்தனர்.
இந்நிலையில், ‘விடாமுயற்சி’ படத்துக்கான விமர்சனத்தையே விக்னேஷ் சிவன் தற்போது இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்துள்ளார்.
விக்னேஷும் அஜித்தின் தீவிர ரசிகர் தான். எந்தவொரு படம் வந்தாலும் முதல் நாளே தியேட்டருக்கு கிளம்பிப் போய் படத்தை பார்த்துவிடுவார். ‘விடாமுயற்சி’ படத்தையும் முதல் நாளே பார்த்த விக்னேஷ், அந்த படத்தை பாராட்டி பதிவிட்டுள்ள இன்ஸ்டா ஸ்டோரி தற்போது பரவி வருகிறது.
‘விடாமுயற்சி திரைப்படம் இன்டென்ஸான த்ரில்லர் படமாக உள்ளது. புதிர்களை சால்வ் பண்ணும் விதமாக ஏகப்பட்ட ட்விஸ்டுகளையும் திருப்பங்களையும் வைத்து இயக்குநர் மகிழ் திருமேனி கொடுத்துள்ளார்.
அஜித் குமாரின் பிரெசன்ஸ் படம் முழுவதும் ஒவ்வொரு ஃபிரேமிலும் தாறுமாறாக உள்ளது. அனிருத்தின் பின்னணி இசையில் அவர் நடந்து வரும் காட்சிகளும், ஸ்டன்ட் செய்யும் காட்சிகளும் மிரட்டுது.
ஓம் பிரகாஷ் மற்றும் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம். த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஆரவ் என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். லைகா நிறுவனத்துக்கு மிகப்பெரிய வெற்றிப் படம் கிடைத்திருக்கிறது வாழ்த்துகள்’ என பதிவிட்டுள்ளார்.
விடாமுயற்சி படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனத்தை விக்னேஷ் சிவன் பதிவிட்ட நிலையில், ‘கவலைப்படாதீங்க விக்னேஷ் சிவன், உங்களுடைய விடாமுயற்சி காரணமாக கூடிய சீக்கிரமே நீங்களும் அஜித் சாரை வைத்து ஒரு படம் பண்ணும் வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என ‘தல’ ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். விக்னேஷின் விடாமுயற்சி திருவினை ஆகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.!