வெங்கட் பிரபு இயக்கி முடித்த ‘பார்ட்டி’ பட வெளியீடு அப்டேட்ஸ்..

சிம்பு-எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய ‘மாநாடு’ என்ற படம் நல்ல வரவேற்பு பெற்றது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து சிவகார்த்தியனை இயக்கவுள்ளார் வெங்கட்.

முன்னதாக, 2018-ம் ஆண்டு அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாரான படம் ‘பார்ட்டி’. ஆனால், பிஜி தீவில் இருந்து வரக்கூடிய சான்றிதழ்கள் கிடைக்க தாமதமானால் படம் இதுவரை வெளியாகவில்லை. தற்போது இப்பிரச்சினை முடிவடைந்து அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் சிவா மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு எடுத்து வருகிறார்கள்.

இப்படம் முழுக்க முழுக்க பிஜி தீவில் படமாக்கப்பட்டது. இப்படத்தில் சத்யராஜ், ஜெய், ஷாம், ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி உள்பட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக பிரேம்ஜி பணிபுரிந்துள்ளார்.

பல வருடங்களுக்கு பிறகு வெளியான ‘மத கஜ ராஜா’ பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதேபோல், அடுத்த ஆண்டு ‘பார்ட்டி’ வெற்றி பெறும் என்று படக்குழுவினர் நம்பிக்கையில் உள்ளனர்.

சமீபத்தில் தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடினார் வெங்கட் பிரபு. இதில் திரையுலகினர் பலரும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள். இந்த நாளில் தான் ‘பார்ட்டி’ படத்தினை வெளியிடக் கூடிய முனைப்பைத் தொடங்கி இருக்கிறார்கள். பார்க்கலாம் ‘பார்ட்டி’ எப்படி இருக்குன்னு.!

venkat prabhu party movie release at 2026 february
actor sathyarajdirector venkat prabhuparty movieசிவகார்த்திகேயன்வெங்கட் பிரபு