மீசையை முறுக்கு 2 : அப்டேட் கொடுத்த ஹிப் ஹாப் ஆதி..!

மீசையை முறுக்கு 2 படம் குறித்து ஹிப் ஹாப் ஆதி அப்டேட் கொடுத்துள்ளார்.

Twist the Meesaya murukku 2 Updated Hip Hop Adhi..!

தமிழ் சினிமாவில் 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மீசையை முறுக்கு. ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த இந்த திரைப்படத்தில் ஆத்மிகா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அப்டேட்டை பகிர்ந்துள்ளார் ஹிப்ஹாப் ஆதி.

இது குறித்து பேசிய அவர் மீசையை முறுக்கு படத்தின் ஒன்றாம் பாகத்தில் ஆதி ஜீவா என்ற இரு நண்பர்களை பற்றிய கதை தற்போது இரண்டாவது பாகத்தில் நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இரு நண்பர்களை பற்றிய படம்தான் எனக் கூறியுள்ளார்.

இது மட்டுமில்லாமல் அந்த இருவரில் ஒருவராக நான் நடிக்கிறேன் இன்னொரு கதாபாத்திரம் யார் என்றால் அவர் உண்மையிலேயே எனக்கு நண்பர்.. எனக்கு தம்பி..நடிக்கிறாயா என விளையாட்டாக தான் கேட்டேன் உடனே சரி என சொல்லினார் அது வேறு யாருமில்லை ஹர்ஷத்கான் தான் என்று கூறியுள்ளார்.

மீசைய முறுக்கு இரண்டாம் பாகத்திற்கான அப்டேட்டை கொடுத்திருப்பது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் கொடுத்திருக்கிறது இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Twist the Meesaya murukku 2 Updated Hip Hop Adhi..!
hip hop adhiLatest newsMeesaya murukku 2tamil cinmaTwist the Meesaya murukku 2 : Updated Hip Hop Adhi..!ஆத்மிகாமீசைய முறுக்கு இரண்டாம் பாகம்மீசையை முறுக்குஹிப்ஹாப் ஆதி