ஓடிடி.யில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 10 தமிழ்ப் படங்கள்..

ஓடிடி தளத்தில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 10 தமிழ்ப் படங்களின் பட்டியல் பார்ப்போம்..

* விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் 10-வது இடத்தில் உள்ளது. இப்படத்தை நெல்சன் இயக்கி இருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் நெட்பிளிக்ஸில் 78 லட்சம் வியூஸ் அள்ளி இருக்கிறது.

* பிரதீப் ரங்கநாதன் நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் படமான டிராகன் 9-ம் இடத்தில் உள்ளது. கடந்த மார்ச் மாதம் நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆன இப்படம் 87 லட்சம் பார்வைகளுடன் 9-ம் இடத்தை பிடித்துள்ளது.

* ஷங்கர் – கமல்ஹாசன் கூட்டணியில் வெளியாகி தியேட்டரில் தோல்வியை சந்தித்த இந்தியன்-2 திரைப்படம், நெட்பிளிக்ஸில் 93 லட்சம் வியூஸ் உடன் 8-ம் இடத்தில் உள்ளது.

* பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் கடந்த ஆண்டு திரைக்கு வந்து வெற்றிபெற்ற ‘மெய்யழகன்’ திரைப்படத்திற்கு நெட்பிளிக்ஸிலும் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் 1 கோடி பார்வைகளுடன் 7-ம் இடத்தில் உள்ளது.

* வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்த வாத்தி திரைப்படம் 1.18 கோடி வியூஸ் உடன் 6-ம் இடத்தை பிடித்திருக்கிறது. 5-இடத்தில் தளபதி விஜய்யின் கோட் படம் உள்ளது. வெங்கட் பிரபு இயக்கிய இப்படம் நெட்பிளிக்ஸில் இதுவரை 1.22 கோடி பார்வைகளைப் பெற்றிருக்கிறது.

* சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம் இந்த பட்டியலில் 4- இடத்தை பிடித்துள்ளது. இப்படம் நெட்பிளிக்ஸில் 1.36 கோடி வியூஸ் அள்ளி இருக்கிறது. 3- இடத்தை அஜித் நடித்த ‘துணிவு’ படம் பிடித்துள்ளது. இப்படம் நெட்பிளிக்ஸில் 1.64 கோடி பார்வைகளை பெற்றிருக்கிறது.

* 2-இடத்தில் தளபதி விஜய்யின் லியோ படம் உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் நெட்பிளிக்ஸில் 2.21 கோடி வியூஸ் அள்ளி உள்ளது. இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள படம் மகாராஜா. நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த இப்படம் 2.71 கோடி பார்வைகளை பெற்றுள்ளது.

* அதேபோல், இந்தியளவில் நெட்பிளிக்ஸில் அதிக பார்வைகளை பெற்ற படங்களின் பட்டியலில் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் முதலிடத்தில் உள்ளது. இப்படம் நெட்பிளிக்ஸில் 4.36 கோடி வியூஸ் அள்ளி உள்ளது.

top 10 most watched tamil movies on netflix

 

actor vijayactor vijay sethupathiott releaseராஜமெளலிவிஜய்