திரை பிரபலங்கள் வெளியிட்ட ‘துரோகம் பழகு’ முதல் பார்வை!

மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. Beaula Magizh தயாரிப்பில், இயக்குநர் சீயோன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘துரோகம் பழகு’. இப்படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

இப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் எஸ்.வி. சேகர், FEFSI தலைவர் ஆர்.கே. செல்வமணி, நடிகர் நட்டி நட்ராஜ், நடிகர் ராம்கி, நடிகைகள் பூனம் பாஜ்வா, இனியா, நந்திதா ஸ்வேதா மற்றும் அஷ்மிதா சிங் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இணைந்து வெளியிட்டனர்.

முதல் பார்வை வெளியாகியுள்ள நிலையில், படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இப்படத்தில் தக்க்ஷன் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் லொள்ளு சபா ஜீவா, ‘வாழை’ ஜானகி அம்மா, வனிதா விஜயகுமார், ஜி. எம். குமார், கஞ்சா கருப்பு, விஜய் டிவி புகழ் திவாகர், அமுதவாணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

- Advertisement -

துரோகம், நம்பிக்கை, உறவுகள் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், சாதாரண மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் அவர்களுக்குள் ஏற்படும் உணர்வுப் போராட்டங்களையும் பேசும் படைப்பாக உருவாகியுள்ளது.

“சில காயங்கள் ஒருபோதும் மன்னிக்கப்படுவதில்லை…” என்ற அழுத்தமான ஒன்-லைனுடன் வெளியாகியுள்ள ‘துரோகம் பழகு’ படத்தின் முதல் பார்வை, படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.

புதுமுக இசையமைப்பாளர்களான பாலா மற்றும் ராஜா இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். படத்தின் பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளதாகவும், அவை படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் உருவாகியுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

கதாபாத்திரத்திற்குத் தேவையான உணர்வுகள் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பான பயிற்சியுடன் தக்க்ஷன் விஜய் நடித்துள்ளார். நடிப்பு மற்றும் சண்டைக் காட்சிகளில் அவரது பங்களிப்பு படத்திற்கு முக்கியத்துவம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இளைஞர்களை குறிப்பாக கவரும் வகையிலும், அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையிலும் ‘துரோகம் பழகு’ திரைப்படம் உருவாகியுள்ளது.

Thurogam PazhaguThurogam Pazhagu First Look Released by Film Celebrities