தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்..!

தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

thuglife movie trailer release update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வருகிற ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மணிரத்தினம் இயக்கத்திலும், சிம்பு ,திரிஷா ,ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரிலீஸாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது வரும் 17ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் வெளியாக உள்ளதாகவும் அதே போல் 24ம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெற அதிக வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

thuglife movie trailer release update
movierelease updatethuglifethuglife movie trailer release updateTrailerஐஸ்வர்யா லட்சுமிசிம்புதக் லைஃப்திரிஷாமணிரத்தினம்