தக் லைப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் கமல்ஹாசன் இவரது நடிப்பில் சமீபத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது.
அதனைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைப் என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சிம்பு,அசோக் செல்வன், திர்ஷா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அடுத்த வருடம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் பத்தாம் தேதி இந்த திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.