அர்ஜுன்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள ‘தீயவர் குலை நடுங்க’ படம் வருகிற 21-ந்தேதி வெளியாகிறது. ஜி.எஸ்.ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து வெளியீட்டு தேதிக்காக காத்திருந்தது.
தற்போது நவம்பர் 21-ந்தேதி இப்படம் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். விரைவில் இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கவுள்ளன. தினேஷ் இலட்சுமணன் இயக்கத்தில் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், பிக் பாஸ் அபிராமி, பிரவீன் ராஜா, ராம்குமார், தங்கதுரை, பேபி அனிகா உள்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து இயக்குநர் தெரிவிக்கையில், ‘சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும். ஆனால், இறுதியில் தர்மமே ஜெயிக்கும் எனும் கருத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி இருக்கிறது’ என கூறினார்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக சரவணன் அபிமன்யு, இசையமைப்பாளராக பரத் ஆசிவகன், எடிட்டராக லாரன்ஸ் கிஷோர் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் இப்படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.