பொங்கல் பண்டிகை, மழை விட்டாலும் தூவும் தூறல்போல அங்கங்கே கோலாகலமாய் தொடரும் பட்சத்தில், இந்த வாரம் ஓடிடி.யில் வெளியீடாகும் திரைப்படங்கள் பற்றிக் காண்போம்..
சூது கவ்வும்-2: விஜய் சேதுபதியின் திரைப்பயணத்தில் பெரிய திருப்புமுனையாக அமைந்த படங்களில் ‘சூது கவ்வும்’ படமும் ஒன்று. இப்படத்தின் 2-பாகம் கடந்த மாதம் திரைக்கு வந்தது.
அர்ஜுன் இயக்கிய இப்படத்தில மிர்ச்சி சிவா கதை நாயகனாக நடித்திருந்தார். ஆனால், இப்படத்திற்கு தியேட்டரில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. இந்நிலையில், இந்த வாரம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது.
அலங்கு: குணாநிதி, செம்பியன் வினோத், காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த திரைப்படம் அலங்கு. இப்படத்தை எஸ்.பி.சக்திவேல் இயக்கியிருந்தார்.
- Advertisement -
மனிதனுக்கும், நாய்க்கும் இடையேயான உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா தயாரித்துள்ளார். இப்படம் இன்று முதல் அமேசான் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
ஃபேமிலி படம்: செல்வக்குமார் திருமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஃபேமிலி படம்’ இப்படத்தில் விவேக் பிரசன்னா நாயகனாக நடித்திருக்கிறார்.
அனிவீ இசையமைப்பில், மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படம் இன்று முதல் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் காணலாம்.
ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் மெட்ராஸ்: பரத் நடிப்பில் உருவாகி இருக்கும் திரில்லர் திரைப்படம் ‘ ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் மெட்ராஸ்’.
இப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நாயர் நடித்துள்ளார். மேலும் அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை பிரசாத் முருகன் இயக்கியிருக்கிறார். இப்படமும் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஆக, ஓடிடி.தளத்தில் பொங்கல் பந்தி தொடர்கிறது.!