மே 3-ம் தேதி முதல், வொண்டர்மென்ட் டூர்: ஏ.ஆர்.ரகுமான் உலகளவில் சுற்றுப்பயணம்

‘தன் மீதான விமர்சனங்களை ஒருபோதும் புறந்தள்ளியது இல்லை’ என கூறியுள்ளார் ஏ.ஆர்.ரகுமான். இது தொடர்பான தகவல்கள் காண்போம்..

ஆஸ்கர் புகழ், இசைப் புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்த ‘தக் லைஃப்’ படம் ஜுன் மாதம் வெளியாகிறது. இந்நிலையில் அவர் ‘தக் லைஃப்’ இசைப்பணி மற்றும் மணிரத்னம் உடனான நட்பு போன்றவை பற்றியும் நெகிழ்ச்சியுடன் பேசினார். மேலும், அவர் தெரிவிக்கையில்,

இயக்குனர், பாடலாசிரியர், பாடகர்கள் என்று பலரின் துணை இருப்பதால் தான், என்னால் பல ஆல்பங்களை தயாரிக்க முடிகிறது. பாலிவுட்டில் 30 ஆண்டுகள் பயணத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்.

எப்போதும் என் மீதான விமர்சனங்களை, நான் ஒருபோதும் புறந்தள்ளியது இல்லை. சுதந்திரமான சிந்தனை கொண்ட பெண்கள் சோதனைகளுக்கு உட்படுவது நல்லது. அது அவர்களை மேம்படுத்தும். மோசமான சூழ்நிலைகள் நம்மை மனிதர்களாக வரையறுக்கிறது.

நான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. எனது பிரார்த்தனையில் நண்பர்களையும் சேர்த்துக்கொள்வதே, நட்பை தான் கொண்டாடும் ஒரே வழி’ என தெரிவித்தார்.

ஏ.ஆர்.ரகுமான் தனது குழுவினருடன் உலகம் முழுவதும் சுற்றி பல்வேறு நாடுகளில் ‘தி வொண்டர்மென்ட் டூர்’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார். இதில் கலை நிகழ்ச்சிகள், அவரது ஹிட் பாடல்கள், பின்னணி இசை உள்ளிட்டவற்றை தலைசிறந்த இசைக்குழுக்கள் மூலம் திரைப்பட வடிவத்தில் வழங்க உள்ளார்.

மே 3-ம் தேதி மும்பையில் தொடங்கும் வொண்டர்மென்ட் டூர், தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலகளவில் கொண்டு செல்லவிருக்கிறார். பாலிவுட்டில் ரங்கீலா மூலம் ஏ.ஆர்.ரகுமான் அறிமுகமாகி 30 ஆண்டுகளை நிறைவு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘இளம் பார்வையாளர்கள் அதிகம் கொண்ட நம் நாட்டுக்கு நல்ல தலைமை இருப்பதால், நல்ல மரியாதை இருக்கிறது. அதனால், வெளிநாட்டு இசைக் கலைஞர்கள் அதிகளவில் வருகை தந்து இசைக் கச்சேரி நடத்துவதாகவும் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

A.R. RahmanMusicthug life movieஇசைஏ ஆர் ரகுமான்