நிறுத்தப்பட்ட ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு.. காரணம் என்ன தெரியுமா?

ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

The shooting of jananayagan was stopped.. Do you know the reason

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும்,H வினோத் இயக்கத்திலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

மேலும் மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, பாபிதியோல் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்ற வரும் நிலையில் மழை காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது மழை நின்றவுடன் மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இது மட்டுமில்லாமல் மே ஐந்தாம் தேதி தனது காட்சிகளை முடித்துவிட்டு விஜய் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

The shooting of jananayagan was stopped.. Do you know the reason
HVinothjananayaganPooja HegdeThalapathy VijayThe shooting of jananayagan was stopped.. Do you know the reason?கௌதம் வாசுதேவ் மேனன்தளபதி விஜய்பாபிதியோல்பூஜா ஹெக்டேமமிதா பைஜூஜனநாயகன்